/* */

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் வழங்கியது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

HIGHLIGHTS

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி
X

பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கரூர் மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, குளத்துப்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தே, கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் வழங்கியது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்த கரூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ரூ ஆயிரம் சேர்த்து ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன. அதே போல, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன்கள் தள்ளுபடி, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இல்லம் தேடிக்கல்வி, பெட்ரோல் விலை ரூ 3 ஆக குறைத்தது. ஆவீன் பால் விற்பனை விலை குறைத்தது என 9 மாத ஆட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக வழங்கியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அங்கு ஒரு மேயர் நியமித்து மக்கள் பணியமர்த்த தமிழக முதல்வர் உருவாக்கி தந்தவர் நமது முதல்வர், ஆகவே மாநகராட்சி மேயர் தேர்தலில் அங்கம் வகிக்கும் இந்த தேர்தலில் திமுக வார்டு உறுப்பினராக உருவாக்கி தர திமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

Updated On: 15 Feb 2022 4:30 PM GMT

Related News