/* */

பல வகை மலர்கள் குவிய 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம்

குமரியில் பல வகை மலர்கள் குவிய 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற புஷ்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

பல வகை மலர்கள் குவிய 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம்
X

குமரியில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அமைந்துள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பழைமை வாய்ந்த 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பல வண்ண மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

பிச்சி, முல்லை, கொழுந்து, மரிக்கொழுந்து , தாமரை, ரோஜா உள்ளிட்ட பலவகை மலர்கள் குவிய நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 17 Aug 2021 1:30 PM GMT

Related News