நீர்நிலைகள், பயன்படுத்தப்படாத கல் குவாரிகளில் குளிக்க தடை விதிக்கப்படுமா?
காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாட்டம் கிராமத்தில் பயன்படுத்தப்படாத கல்குவாரியில் மிக சென்ற மாணவன் மூழ்கிய நிலையில் தேடும் தீயணைப்புத் துறையினர் (பைல் படம்)
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் ஜூன் மாதம் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கோடை விடுமுறை நாள் முப்பது நாட்கள் முதல் 45 நாட்கள் வரை மாறுபட்டு இருக்கும். இக்காலங்களில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விளையாட்டு, இசை, தனித்திறன் கலைகள், கல்வி என பலவற்றில் தங்களை ஈடுபட்டு மெருகேற்றிக் கொள்ள பெற்றோர்கள் பல்வேறு வகுப்புக்களுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
மேலும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு கோடை விடுமுறையை கொண்டாடவும், சொந்த கிராமங்களுக்கு தங்களது உறவினர்களை அறிந்து கொள்ள அழைத்து செல்வதும் வாடிக்கை.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்த கோடை விடுமுறையில் முறையாக கவனிக்க இயலாத ஒரு நிலை உருவாகும். தொடர்ந்து கல்வி கற்று வருவதால் குறைந்த பட்சம் இந்த விடுமுறையாவது அவர்கள் விருப்பப்படி நடக்கட்டும் என குடும்பத்தில் ஒருவர் கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் கடைசியில் அவனை அவனுக்கு விருப்பத்திற்கு செயல்பட அனுமதிப்பதும் ஒரு கட்டத்தில் தங்களுக்கு தெரிந்த இழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரியாது இதனை அனுமதிக்கின்றனர்.
மேலும் விடுமுறை தினங்களில் வெளியே செல்லும் இடம் மற்றும் நபர்கள் குறித்தும் பெற்றோர்களிடம் இத்தகைய மாணவர்கள் தெரிவிப்பதில்லை என்பதும் தெரிய குறையாகவே உள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழை மற்றும் புயல் காரணமாக நீர் நிலைகள் மற்றும் விவசாய கிணறுகள் மட்டுமில்லாது பயன்படுத்தப்படாத மிகப் பெரிய ஆழமுள்ள கல்குவாரிகளில் நீர் தேங்கிக் கிடக்கிறது.
இதில் அவர்கள் தனது நண்பர்களுடன் சென்று குளித்து வருவதும், நீச்சல் தெரியாத நபர்களும் ஆர்வம் காரணமாக இறங்கும் நிலையில் அவர்களை மீட்பதில் சிக்கலும் ஏற்பட்டு இறுதியில் தீயணைப்பு துறையினர் மீட்கும் நிலையில் உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீர்நிலைகளில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மேல் உள்ளது.
இதனை தவிர்க்க பருவ மழை காலங்களில் விடப்படும் எச்சரிக்கை போல் நீர்நிலைகளில் விவசாயக் கிணற்றில் போதிய பயிற்சி இல்லாமல் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், அங்கு அரசு சார்பில் எச்சரிக்கை பலகை காவல்துறை உதவியுடன் வைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பெற்றோர்களும் விடுமுறை தினம் என அலட்சியம் இல்லாமல் பிள்ளைகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அதனை தவிர்த்து விட்டு இழப்புகளை சந்திக்க வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்கள் அறிவுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu