/* */

மாகரல் வார்டு இட ஒதுக்கீட்டை மாற்றவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு

மாகரல் கிராம ஊராட்சியில் வார்டு இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்யவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

மாகரல் வார்டு  இட ஒதுக்கீட்டை மாற்றவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு
X

மாகரல் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும், இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு என்று கூறி பொதுமக்கள் காஞ்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது மாகரல் கிராம ஊராட்சி. இங்கு அனைத்து சமுதாய குடியிருப்புப் பகுதி, பள்ள காலனி , மேட்டுகாலனி என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளது.

கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முதல் வார்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலின்போது பொது பிரிவாகவே இருந்து வந்தது.

தற்போதைய உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வரையறுக்கப்பட்ட போது ஆதிதிராவிடர் பிரிவினர் போட்டியிடலாம் என மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பிரிவினர் வார்டு நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்வதற்கு எந்த ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தி பொது மக்களிடையே கருத்து கேட்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர் தேர்தல் நடை விதிமுறைகளால் புகார் பெட்டியில் தங்களது குறை மனுவை செலுத்தியுள்ளனர்

இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்றால் வரும் உள்ளாட்சித் தேர்தலை ஒன்றாவது வார்டு பொதுமக்கள் நிச்சயம் புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Sep 2021 6:15 AM GMT

Related News