/* */

வழிகாட்டு நெறிமுறைகளுடன் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

வழிகாட்டு நெறிமுறைகளுடன் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பு
X

காஞ்சிபுரம் BMS அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் துவங்கின

காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளியில் நுழையும் முன் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முககவசம் கிருமி நாசினிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வகுப்புகளில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களால் அனைத்து வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 பள்ளிகளில் 72 ஆயிரத்து 133 மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கு வரவுள்ளனர். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளி வசதிகள் ஏற்ப முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Sep 2021 3:45 AM GMT

Related News