/* */

காஞ்சிபுரத்தில் தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட பேட்டரி , 3 நிலை வேகம் கட்டுப்பாடு , எளிதில் கையாளும் வகையில் வடிவமைப்பு என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த வாகனம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்
X

மேக் இன் தமிழ்நாடு எனும் வகையில் உருவாக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் காஞ்சியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் மத்திய, மாநில அரசுகள் மின்சார மோட்டார் வாகனங்கள் உற்பத்தியும் தொடங்க தொழிற்சாலைகளுக்கு அறிவுரை வழங்கியது.

அந்த வகையில் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரத் நியூ எனர்ஜி நிறுவனத்தினர் *மேக் இன் தமிழ்நாடு* எனும் வாசகத்துடன் புதிய மின்சார இரு வாகனத்தை சந்தையில் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இதன் 4வது விற்பனை முகமை நிலையத்தை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் பகுதியில் பவானி ஏஜென்சி எனும் விற்பனை நிலையத்தினை மருத்துவர்.சம்பத்ரவி நாராயணன் மற்றும் பி.என்.சி மோட்டார்ஸ் நிறுவன உறுப்பினர் ராமசாமி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நான்கு வாடிக்கையாளர்களுக்கு பி என் சி சேலஞ்சர் எஸ் 110 மாடல் மின்சார இருசக்கர வாகனத்தின் சாவி வழங்கப்பட்டது.

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து நிறுவனத்தின் நிர்வாகி விஜய் கூறுகையில் , எங்களது நிறுவனமான பாரத் நியூ எனர்ஜி நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யபடும் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.

அதன் ஒரு வகையான மின்சார இருசக்கர வாகனம் தான் சேலஞ்சர் எஸ் 110 எனும் மின்சார வாகனம். இந்த வாகனத்தின் சேஸ் மிகவும் பாதுகாப்பானது. குறிப்பாக இவ் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்ரோல் 40 பேட்டரி எளிதில் வாகனத்திலிருந்து எடுத்து கையாளக் கூடிய வகையில் வாகனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2.1 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியுடன் சார்ஜர் உடன் இதில் இணைக்கப்பட்டுள்ளது இது அதிகபட்ச பாதுகாப்பை கொண்டிருப்பதுடன், பேஸ் -2 தர சான்றிதழை பெற்றுள்ளது. இந்த பேட்டரிக்கு ஐந்தாண்டு அல்லது 60,000 கிலோ மீட்டர் பயன்பாடு உத்தரவாதத்தை இந்நிறுவனம் வழங்குகிறது.

சேஸ் ( Body Chase) க்கு 7 வருடம் , பவர்டிரெய்ன் க்கு 3 வருடம் உத்தரவாதத்தையும் வாடிக்கையாளருக்கு வழங்கி உள்ளது. இந்த மின்சார வாகனம் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் ஆகும். 200 கிலோ எடை சுமக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண் பெண் இருபாலரும் இதனை எளிதாக கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். தீ விபத்தில் இருந்து முற்றிலும் பாதுகாத்து கொள்ளும் வகையில் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் நகரம் மற்றும் கிராமப்புற கடின சாலைகளிலும் எந்தவித அச்சமின்றி செல்லும் வகையில் வாகன உறுதி உள்ளது. மேலும் வேகத்தினை கட்டுபடுத்த 3 நிலைகளில் இதை நாம் மாற்றி பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2023 8:45 AM GMT

Related News