/* */

காஞ்சிபுரம்: பட்டா தொடர்பான கணினி திருத்த சிறப்பு முகாமை ஆட்சியர் ஆய்வு

காவாதண்டலம் கிராமத்தில் வருவாய்துறை சார்பில் பட்டா தொடர்பான கணிணி திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: பட்டா தொடர்பான கணினி திருத்த சிறப்பு  முகாமை ஆட்சியர் ஆய்வு
X

காவாதண்டலம் கிராமத்தில் வருவாய்துறை சார்பில் பட்டா தொடர்பான கணிணி திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்காெண்டார்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் பட்டா தொடர்பான கணினி திருத்தங்கள் சிறப்பு மூலம் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதி வாரம் தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராமங்கள் தோறும் துணை ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கபட்டு கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா பிழைகள், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பல மனுக்கள் உடனடியாக கணினி மூலம் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் திருத்தம் மேற்கொண்ட படிவங்களினை வழங்கினார். அதனை தொடர்ந்து கிராமத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார்.

சிறப்பு முகாம் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாவிஜியகுமார், கிளை கழக தலைவர் ஓம்சக்தி வரதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 9:45 AM GMT

Related News