/* */

கொரோனா கட்டுப்படுத்தப்படும்: நம்பிக்கையூட்டுகிறார் ஆணையர் மகேஸ்வரி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமாக, தேர்தல் பணிகள் நடைபெற்றதால், பல இடங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கைகளை எடுக்காததுதான் என்ற கருத்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 855 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குறிப்பாக‌ காஞ்சிபுரம் நகரில் மட்டும் 225 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது: தமிழக அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் நகர் முழுவதும் செயல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இதுவரையில் முககவசம் அணியாத நபர்களிடம் 14லட்சத்து 41ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க 40 நபர்கள் நகர் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 1818 நடமாடும் மருத்துவ சோதனை வாகனங்களில் 1,22,812 பாதிரிகளும் , மருத்துவ முகாம்களில் 1,09,301 மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ராட்சத கிரிமி நாசினி இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 24கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு பரவல் தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தியுள்ளதால் விரைவில் பாதிப்பு குறையும்.

பெருநகராட்சி ஊழியர்கள் , தற்காலிக பணியாளர்கள் என பலர் தடுப்பு நடவடிக்கைளில் சுழற்சி முறையில் தொடர் பணிகளிலும் , தூய்மை பணிகளிலும் ஈடுபடுகின்றனர் என்று, அவர் தெரிவித்தார்.

Updated On: 4 May 2021 8:35 AM GMT

Related News