/* */

காஞ்சிபுரம்: +2 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

மாணவர்கள் தேர்வு பயமின்றி எதிர்கொள்ளவும்‌, வெற்றி பெற வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: +2 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று முதல் பிளஸ் 2 அரசு தேர்வு துவங்கியது.. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 6516 மாணவர்களும் 7002 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 50 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் தலா 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு முதன்மைத் தேர்வு கண்காணிப்பாளர் ஒருவரும், அவருக்கு கூடுதலாக பணிபுரிய ஒரு கண்காணிப்பு அலுவலரும் நியமிக்கப்படுவர். மேலும் மாவட்டம் முழுவதும் 50 துறை அலுவலர்களும் 6 கூடுதல் துறை அலுவலர்களும் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 85 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். தேர்வில் முறைகேடுகள் செய்யும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் அந்தந்தப் பள்ளிகளில் தேர்வுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் தேர்வு மையங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 May 2022 6:30 AM GMT

Related News