பன்றிக்கு வைத்த மின்வேலியில் விவசாயி தானே சிக்கி உயிரிழப்பு

பன்றிக்கு வைத்த மின்வேலியில் விவசாயி தானே சிக்கி உயிரிழப்பு
X

விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்ஓயர்கள் அமைப்பு

வாலாஜாபாத் அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் ஆவதை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தம்மனூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த விவசாயி ஆதிகேசவன். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், திலகவதி என்ற மகளும், துளசிராமன், மணிகண்டன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

ஆதிகேசவன் விவசாய தொழில் செய்து வந்த நிலையில் இவருடைய நிலத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் ஆவதை தடுக்க தன்னுடைய நிலத்திற்கு அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இன்று காலை 10.00 மேல் விவாசயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச தன்னுடைய நிலத்திற்கு சென்றபோது, பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியில் மாட்டிக்கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இது குறித்து அவரது குடும்பத்திற்கு தெரிய வந்த நிலையில் மாகரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் பேரில் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் காட்டுப்பன்றி தொல்லை குறித்து தெரிவித்து , மாவட்ட வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்த நிலையில் தானே வைத்த மின்வெளியில் சிக்கி விவசாயி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!