சிறுநீரகத்தை சுத்தம் செய்ய இந்த பிரண்டை போதும் ...! உடனே இந்த சுவாரஸ்ய பயன்களை தெரிஞ்சுக்கோங்க ....!
பிரண்டை என்பது நம் உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை செடி. இது பெரும்பாலும் கிராமங்களில் அதிக இடங்களில் வளர கூடியது . மேலும் கிராமங்களில் அதிகமாக இந்த பிரண்டையை பயன்படுத்துகின்றனர் . ஆனால் இது நகரங்களில் கிடைப்பது மிகவும் அரிது . உணவே மருந்து என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவந்துள்ளனர். அந்த வகையில், பிரண்டையும் ஒன்று . இது மருத்துவ செடிகளில் ஒன்றாக உள்ளது . மேலும் இது பசியை தூண்டுவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது .
பிரண்டைக்கு கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு . அது பெத்த வயிற்றுக்கு பிரண்டை என்பதாகும். இதற்கு அடிப்படைக்காரணம் கிராமப்புறங்களில் தங்கள் பிள்ளைகள் சொல் மீறி நடப்பதினால் ஏற்படும் கோபத்தினால் பெற்றோர்களுக்கு உடல் வெப்பம் அதிகரித்து வயிற்றுப்புண் ஏற்படுத்தும். இதனை தடுக்கும் தன்மை பிரண்டைக்கு இருப்பதினால் பெத்த வயிற்றுக்கு பிரண்டை என்று கூறுவது வழக்கம்.
இதற்கு வஜ்ஜிரவல்லி என்று வேறு பெயரும் உண்டு. பிரண்டையில் பல வகைகள் உள்ளன. அவை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை, புளிப்பிரண்டை மற்றும் ஓலைப் பிரண்டை ஆகும். இருப்பினும் சாதாரணப் பிரண்டையே அனைவரும் உணவில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பிரண்டையின் மருத்துவப் பண்புகள்:
பிரண்டை வயிற்று கோளாறுகள்,எரிச்சல்,செரிமானப் பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலை, வேர் மற்றும் தண்டு மருத்துவக் குணங்கள் கொண்டதாக திகழ்கிறது.பிரண்டை கீரை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலைத் தடுக்க உதவும். இதில் வைட்டமின் ஏ, மெக்னிசியம் , நார்ச்சத்து , கால்சியம் , இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் உள்ளன . இது மூட்டுவலிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது .மூளை நரம்புகளை பலப்படுத்தி மூளை செயல்பாட்டினை ஊக்குவிக்குகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனையை சரிசெய்கிறது.
பிரண்டை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. பிரண்டை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது .பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும் . மேலும் நியாபக சக்தியை அதிகரிக்கும் .
பிரண்டையின் முக்கியமான பயன்கள்:
- நோய்களை குணமாக்குதல்
- நல்ல செரிமானம்
- சர்க்கரைநோயில் நன்மை
- உடல் எடையை குறைக்கும்
- கல்லீரல் ஆரோக்கியம்
- எலும்பு ஆரோக்கியம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu