தண்ணீர் தாகம் அடிக்கடி ஏற்பட்டு நாக்கு வறண்டு போதா....? அப்போ இதை சாப்பிட்டு பாருங்க...!

இளநீர், கருப்பு திராட்சை, வெள்ளரிக்காய், வாழைப்பழம். இந்த உணவுகளை சாப்பிடும்போது நம் உடம்பில் நீர்சத்து ஏற்பட்டு தண்ணீர் தாகத்தை போக்க உதவும் என தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீர் :

தண்ணீர் நமது வாழ்வில் இன்றியமையாத அடிப்படை வசதிகளுள் ஒன்றாகும்.உணவின்றி மனிதர்கள் வாழமுடியும் ஆனால் தண்ணீர் இன்றி வாழ இயலாது.அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகவும் அவசியமாகும்.தண்ணீர் அவசியம் என்பதால் சிறிதளவு மட்டும் குடிக்க கூடாது ஒரு நாளில் மனிதன் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நமது உடலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நம்மிடம் நீர்ச்சத்து குறைந்தால் மட்டுமே அதிக தாகம் ஏற்படும்.அதை கட்டுப்படுத்த சில உணவுப்பொருள்களை நாம் நம் வாழ்வில் எடுத்து கொள்ள வேண்டும்.அந்த உணவுபொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

இளநீர்:

இளநீர் தாகம் தீர்க்க ஒரு சிறந்த இயற்கை பானம். இது சுமார் 94% நீர்ச்சத்து கொண்டது, அதனால் உடலின் ஈரப்பதத்தை காக்க உதவுகிறது. இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்களான பொட்டாசியம், மக்னீசியம், மற்றும் கால்சியம் போன்றவற்றின் காரணமாக, இது உடலின் ஈரப்பதத்தை விரைவில் சீராக்கி, தாகத்தை விலக்க உதவுகிறது. அதோடு, இயற்கையான சக்கரையும் கொண்டிருப்பதால், இதைப் பானமாக அருந்தும் போது உடலுக்கு உடனடி ஆற்றலும் கிடைக்கிறது.

கருப்பு திராட்சை:

கருப்பு திராட்சை தாகம் தீர்க்கும் மற்றும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கும் பழமாகும். இது நீர்சத்து மற்றும் இயற்கை சத்துக்களால் மிக உயர்ந்தது. கருப்பு திராட்சையில் அதிகமாக உள்ள நீர் உடலின் ஈரப்பதத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 சதவீதம் உள்ளதால் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இதனால், தாக உணர்வு குறையும்.

வாழைப்பழம்:

குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதையும், தாகம் எடுப்பதையும் தடுக்கும்.

கிவி:

கிவி பழம் புளிப்பு சுவை கொண்டிருந்தாலும், தாகத்தை தணிக்கும் தன்மை அதற்கு உண்டு. இதனால், உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கிறது.

ஆப்பிள்:

எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று ஆப்பிள். ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கிறது.இதை நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

ப்ளம்ஸ்:

ப்ளம்ஸ் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது தாகத்தைப் போக்க உதவுகிறது. ப்ளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், நீர்ச்சத்து கிடைக்கும்.

தர்பூசணி:

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உடல் வறட்சி, நா வறட்சியைப் போக்கி குளிர செய்கிறது. இதனால் உடல் வெப்பம் குறைந்து தாகத்தை தவிர்க்கிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil