அம்மாபேட்டை அருகே மாத்தூரில் காசநோய் ஒழிப்பு, தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம்

அம்மாபேட்டை அருகே மாத்தூரில் காசநோய் ஒழிப்பு, தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம்
X

மாத்தூர் ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆலாம்பாளையம் மாத்தூரில் காசநோய் ஒழிப்பு, தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம் நேற்று (பிப்.6) நடைபெற்றது.

அம்மாபேட்டை அருகே உள்ள ஆலாம்பாளையம் மாத்தூரில் காசநோய் ஒழிப்பு, தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம் நேற்று (பிப்.6) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் ஆலாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் ராமலிங்கம் புதூர் மற்றும் அழகு நாச்சி அம்மன் கோயில் பகுதிகளில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க தின நோக்கம், 1 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் குடற்புழு மற்றும் நோய் தொற்றுகள், சாப்பிடுவதற்கு முன்பும் கழிவறை சென்று விட்டு வந்த பின்பும் கை கழுவ வேண்டியதின் அவசியம், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜய் சேகர், சுகாதார ஆய்வாளர் சீனிவாச ரகுபதி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர் மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு!..