ஈரோடு வேளாளர் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி!
மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரை நிகழ்ச்சி.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்.20) நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ் பண்பாட்டை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். முதல்வரின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி, கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 3ம் கட்டமாக பரப்புரையின் நிகழ்வு ஈரோடு வேளாளர் மகளிர் காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமைகளைப் பறைச்சாற்றும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் "மானுடம் வெல்லும்" என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா தலைமையில் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட உள்ளன. நிகழ்வில் மாணவா்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன் அரங்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ திட்ட அரங்குகள், வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் இடம்பெறும் அரங்குகள் அமைக்கப்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளன. எனவே, நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu