ஈரோட்டில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், இ-சேவை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

ஈரோட்டில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், இ-சேவை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
X

போலி சான்றிதழ் தயாரிப்பு கைது (பைல் படம்).

ஈரோட்டில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், இ-சேவை மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், இ-சேவை மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளில் சிலர் போலியான பிறப்பு சான்றிதழ் களை அச்சடித்து மோசடி செய்து வருவதாக ஈரோடு மாவட்ட வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், வீரப்பன்சத்திரம் பகுதி கிராம நிர்வாக அதிகாரி அன்பழகன், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பாலகிருஷ்ணன் (வயது 43) என்பவரை பிடித்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் போலியான பிறப்பு சான்றிதழ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, போலி பிறப்பு சான்றிதழ் தயாரிக்க பாலகிருஷ்ணனுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் தனசேகரன் என்பவருடைய மனைவி பாலாமணி (வயது 39), பள்ளிபாளையம் ராஜா வீதியை சேர்ந்த தறிப்பட்டறை மேலாளர் யுவராஜ் (வயது 41), குமாரபாளையம் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த இ-சேவை மைய உரிமையாளர் யுகேஷ் (வயது 29) ஆகிய 3 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி உள்ள பாலாமணி மற்றும் யுகேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
தேர்தல் முடிவுடன் ஈரோடு மாவட்ட போலீசாரின் தேர்தல் பிரிவு கலைக்கப்பட்டது