சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் கோயில்கள் நாளை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்கள் நாளை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது.. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது.. பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்ததவகையில், வரும் நாளை (செவ்வாய்க்கிழமை) நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. அந்த வகையில் கிரகணம் நிகழும் வேளையில் தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களின் நடை அடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளதால், மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது.அந்த வகையில் கிரகணம் நிகழும் வேளையில் பல்வேறு கோயில்களின் நடை அடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திர கிரகணம் நாளை மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணிவரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது நாளை பிற்பகலுக்கு பிறகு கிரகணத்தை நாம் காண முடியும். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிசாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில், திண்டல் வேலாயுதசாமி கோயில், மகிமாலீஸ்வரர் கோயில், ஈரோடு கோட்டை ஆரூத்ரா கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்க நாதர் கோயில், கருங்கல்பாளையம் சோளீஸ்வரர் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா ஆகிய கோயில்கள் நாளை மதியம் உச்சிகால் பூஜைக்கு பிறகு அடைக்கப்பட உள்ளது.
சந்திர கிரகணம் முடிந்த பின்பு, நாளை மாலை கோயிலில் தூய்மை பணிகள் மேற்கொண்டு, பரிகார பூஜைகள் செய்த பின் மாலை 7.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்படுவர்கள் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி கோவில்களில் மதியம் நடை அடைக்கப்பட்டு, கிரகணம் முடிந்ததும் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu