பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா, நீங்கள்தான் அடுத்த வெற்றியாளர்

பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா, நீங்கள்தான் அடுத்த வெற்றியாளர்
X
நாமக்கல், பாச்சலில் உள்ள பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தின விழா நடந்தது.

பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பாச்சலில் அமைந்துள்ள பாவை கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். சேலம் டி.எல்.சி., கார்னர் ஸ்டோன் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குனருமான சங்கீதா ப்ளோரோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில், "இன்று பணி ஆணை பெற்ற நீங்கள், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், சவால்களும் போட்டிகளும் நிறைந்த இன்றைய சமூகத்தில், தொடர்ந்து கற்றல் என்ற பண்பே உங்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிநடத்தும்," என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கைநடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்ற 4,389 மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (சேர்க்கை) வக்கீல் செந்தில், இயக்குனர் (திறன் வளர் ஆராய்ச்சி மையம்) கிருஷ்ணமூர்த்தி, வேலைவாய்ப்பு மைய அலுவலர் தாமரை செல்வன் உள்ளிட்ட அனைத்து கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story