முன்னாள் ராணுவத்தினரிடம் ரூ.30 கோடி மோசடி:வேறு பிரிவுக்கு வழக்கு மாற்றம்..!

முன்னாள் ராணுவத்தினரிடம் ரூ.30 கோடி மோசடி:வேறு பிரிவுக்கு வழக்கு மாற்றம்..!
X

போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவு (கோப்பு படம்)

முன்னாள் ராணுவத்தினரிடம் ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கு, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினரிடம் ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கு, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு முனிசிபல் காலனியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 தவணையாக ரூ.9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் என கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவர்ச்சி விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி முன்னாள் ராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர். இரண்டு ஆண்டாக பணம் தராததால், முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு, ஈரோடு ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் அறிவுரையின்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதலீட்டாளர்களின் புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், 22 பேர் மட்டுமே ரூ.30 கோடி அளவுக்கு முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story