ஈரோடு க.குளத்தில் நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நிகழ்ச்சி
நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் நடைபெற்றது.
ஈரோடு க.குளத்தில் நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஈரோடு சுகாதார மாவட்டம் - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் படி, 'நடப்போம் நலம் பெறுவோம்' நடைப்பயிற்சி நிகழ்ச்சி ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள நடைப்பயிற்சி நடைபாதையில் பெருந்துறை வட்டாரம் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மகேந்திரன், பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மரு.பேபி, மருத்துவ அலுவலர்கள் மரு.சவிஆர்த்தி மரு.சங்கரநாராயணன் மரு.சசிகுமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் கௌரிசங்கர், ரஞ்சித்குமார், மைக்கேல், தினகரன், கோகுல், பவித்ரன், செவிலியர்கள், இதர பணியாளர்கள் மற்றும் செங்குந்தர் பொறியியல் கல்லூரி மற்றும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்,
நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் ஈரோடு எஸ்கேப் சித்த ஆயுர்வேத மருத்துவமனை சார்பாக - மூலிகை டீ சுமார் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சுகாதார விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu