ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பத்தாம் ஆண்டு துவக்க விழா ஈரோடு மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு மத்திய மாவட்ட அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பத்தாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடினர்.

ஈரோடு மத்திய மாவட்ட அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர்.

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், தமிழ் மாநில காங்கிரஸின் பத்தாம் ஆண்டு துவக்க விழா பெருந்துறை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் கொடி ஏற்றி வைத்தார். கட்சித் தொண்டர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் வேஷ்டி, சேலை வழங்கினார்.

தொடர்ந்து, மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கொற்றவேல், சின்னசாமி, பழனிச்சாமி செல்லதுரை, ஈரோடு வட்டாரத் தலைவர் புவனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் தொழிற்சங்க தலைவர் ரபிக், மாணவரணி மாவட்டத் தலைவர் அன்பு தம்பி, தோட்டச் செயலாளர் ராம் லட்சுமணன், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் சஞ்சய், ஈரோடு மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story