இறகுப்பந்து போட்டியில் கலக்கிய ஈரோடு வீரர்கள்: கணிசமான சாதனை..!
ஈரோடு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. 45 வயது, 50 வயது, 55 வயது, 60 மற்றும் 65 வயதிற்குப்பட்ட பிரிவிற்கான போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் ஆடவர் இரட்டையருக்கான 55 வயது பிரிவில் பல்வேறு சுற்றுகளை கடந்து கீரின் பார்ம் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன் வாசுவும், 50 வயதிற்குப்பட்ட பிரிவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப்பும், 45 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நீல்கீரிஸ் பாட்மின்டன் அகாடமியின் பயிற்சியாளர் செந்தில்வேலவன் ஆகியோர் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஆடவர் இரட்டையருக்கான 55 வயதுக்கு உட்பட்ட விவேக், 60 வயதிற்குப்பட்ட பிரிவில் கணேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இவர்கள் முதல், இரண்டு இடங்களை பிடித்து 9 கோப்பைகளை பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், இவர்கள் கோவாவில் வரும் மார்ச் மாதம் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu