முடிவுக்கு வந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கு

முடிவுக்கு வந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கு
X

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கு - மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல்.

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (பிப்ரவரி 10ம் தேதி) விலக்கிக் கொள்ளப்பட்டது.

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (பிப்ரவரி 10ம் தேதி) விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:-

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று (பிப்ரவரி 10ம் தேதி) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் உள்ளிட்ட அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story