ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தேசிய தரச்சான்று

Erode news- தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று வழங்கியுள்ளனர்.
Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் ‘ஏ பிளஸ்' தரச் சான்று வழங்கியுள்ளனா்.
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரத்தையும் கல்வியியல் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தும் நிறுவனமான தேசிய தரச் சான்று மற்றும் மதிப்பீட்டு அமைப்பின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு "தர நிர்ணயம்" வழங்கி வருகிறது.
அந்த வகையில் அண்மையில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியினை (தன்னாட்சி) தேசிய தரச் சான்று மற்றும் மதிப்பீட்டு அமைப்புக் குழுவினர் ஆய்வு செய்து 'ஏ பிளஸ்' தரச் சான்றினை வழங்கியுள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி சுயநிதிக் கல்லூரிகளில் இக்கல்லூரியானது நான்காவது சுற்றில் கல்லூரிகளின் தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் கல்லூரியாகத் தரம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் வரிசையில் சிஜிபிஏ 3.49 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்று சிறந்த தன்னாட்சிக் கல்லூரியாகத் திகழ்கிறது.
இத்தரத்தினைப் பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றிய கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் கல்லூரியின் தாளாளர், பெருந்துறை கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறக்கட்டளையின் தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu