ஈரோடு டவுன் சப்-டிவிஷன்களில் 22 பேர் குண்டாசில் கைது

Erode news- குண்டர் சட்டம் (கோப்புப் படம்).
Erode news, Erode news today- ஈரோடு டவுன் சப்-டிவிஷன்களில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 22 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் கூறியதாவது:-
ஈரோடு டவுன் சப்-டிவிசனுக்கு உட்பட்ட ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசன், கருங்கல்பாளையம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொலை சம்பவங்கள் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசனில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 15 கொலை வழக்குகளில் அனைத்து வழக்குகள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இதேபோல கொள்ளை சம்பவங்களில் ஓரிரு வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 மாதத்தில் பல்வேறு தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 22 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu