ஈரோடு மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என தெரியுமா?

ஈரோடு மாவட்டம் ஈங்கூர், கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என தெரியுமா?
X

மின்தடை (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் ஈங்கூர், கோனேரிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (25.01.2023) அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :-

பெருந்துறை தெற்கு பகுதி, நாளை கொங்கு கல்லூரி பகுதி, நந்தா கல்லூரி பகுதி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை வீட்டுவசதி வாரிய பகுதி.

கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்களம், பூதப்பாடி, குட்டமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்டனூர், கல்பாவி, காடப்பநல்லூர், சின்னபள்ளம், ஆனந்தம் பாளையம், ஊமாரெட்டியூர், கோனேரிப்பட்டி பிரிவு, குறிச்சி ஆகிய பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுவதால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது வீட்டு வேலைகள் மற்றும் பணிகளை மாற்றி அமைத்து மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 24 Jan 2023 5:59 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...
 2. திருச்செந்தூர்
  மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
 3. அரசியல்
  அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி
 4. உலகம்
  ரஷ்ய நாட்டு இளைஞர்களுக்கு அதிபர் விளாடிமிர் புதினின் புதிய வேண்டுகோள்
 5. அரசியல்
  சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
 6. இந்தியா
  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக போகிறது வந்தே பாரத் ரயில்கள்
 7. தமிழ்நாடு
  ஏ.சி. பயன்படுத்துவோர் மின் கட்டணம் எகிறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
 8. ஆன்மீகம்
  பங்குனி உத்திரம் நாளில் முருகனை வழிபடுங்க!
 9. காஞ்சிபுரம்
  திமுகவை எதிர்ப்பவர்களுக்கு டெபாசிட் போகும்; அமைச்சர் மா.சுப்ரமணியன்...
 10. காஞ்சிபுரம்
  நகை அடகு கடை உரிமையாளர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை