/* */

கரும்புகொள்முதலுக்கு வியாபாரிகள் ஆர்வமின்மை:சில்லறை விற்பனை தொடங்கிய விவசாயிகள்

தற்போது வெளியூர் வியாபாரிகள் வராததால் விளைந்துள்ள கரும்புகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

கரும்புகொள்முதலுக்கு  வியாபாரிகள் ஆர்வமின்மை:சில்லறை விற்பனை தொடங்கிய விவசாயிகள்
X

பெங்கல் கரும்பு வெட்டும் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரும்பு கொள்முதலுக்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், சில்லறை விற்பனை கரும்பு விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம்,கோமணம்பட்டி, மூங்கில்பட்டி, கணவாய்ப்பட்டி, கன்னியாபுரம், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஓராண்டு பயிரான கரும்பு தற்போது மகசூல் பருவத்திற்கு வந்துள்ளது. வரும் பொங்கலுக்காக இவை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

பொதுவாக மதுரை,திருச்சி திருப்பூர், கோயம்பத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து கரும்புகளை கொள்முதல் செய்வது வழக்கம். டிசம்பர் மாத தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு முன்தொகை கொடுத்து முன்பதிவு செய்து கொள்வர். விளைநிலங்களில் நேரடியாக கரும்புகளை பறித்து 10 கரும்பு கொண்ட கட்டுகளாக கட்டி வெளியூர்களுக்கு கொண்டு செல்வர்.

கடந்த ஆண்டு கொரோனா காலகட்டமாக இருந்தாலும் ஒரு டன் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு நியாய விலைக் கடைகளில் கரும்புகள் வழங்கப்பட்டு வருவதால் ஒரு டன் 4000 ரூபாய் விலைக்கு கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது வெளியூர் வியாபாரிகள் வராததால் விளைந்துள்ள கரும்புகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே தோட்டத்திலே சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40 என விற்பனை செய்து வருகின்றனர். பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் நியாய விலைக் கடைகளில் வழங்குவதற்காக கூட்டுறவு சங்கத்தில் இருந்தும் இன்னமும் கொள்முதல் செய்யவில்லை.

இதனால் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக 10 எண்ணிக்கை உள்ள ஒரு கட்டு மொத்த விலையில் 300 முதல் 500 வரை விற்பனையாகும். வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யாததால் இதன் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளே வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கரும்புகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 12 Jan 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...