/* */

கலை திறமையை காட்டி பசியை போக்கி கொள்ளும் ஓவியர்

சாலையில் கண்டவரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்காமல், தன்னுள் இருக்கும் கலை திறமையை காட்டி தனது அன்றாட பசியை போக்கி கொள்ளும் ஓவியர்.

HIGHLIGHTS

கலை திறமையை காட்டி பசியை போக்கி கொள்ளும் ஓவியர்
X

சாலையோர சுவற்றில் கரித்துண்டுகளை கொண்டு ஓவியம் வரையும் முதியவர் செல்வம்.

எளிதாக சாலையோரம் கிடைக்கக்கூடிய சில வகை செடிகள் மற்றும் அடுப்புக்கரி, சாக்பீஸ் துகள்களைக் கொண்டு முதியவர் ஒருவர் சாலையோரம் உள்ள சுவற்றில் வண்ணம் தீட்டுவது அவ்வழியே செல்லும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாக சுற்று சுவற்றில் முதியவர் ஒருவர் மாலை நேரத்தில் இயற்கை ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.

இதனால் அவ்வழியே சென்ற ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அதாவது அந்த முதியவர் வரையக்கூடிய ஓவியத்திற்கு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய அடுப்புக்கரி துகள்கள் மற்றும் மூலிகைச் செடிகளைக் கொண்டு இயற்கையான எழில்கொஞ்சும் ஓவியம் ஒன்றை வரைந்தார். ஓவியங்களை வரைந்த செல்வம் என்ற இந்த முதியவர் தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து கற்பனை மூலமாக இதுபோன்று சாலையின் ஓரங்களில் உள்ள சுவற்றில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து அதனைப் பார்க்கும் பொதுமக்கள் தரக்கூடிய பணத்தை பெற்றுக்கொண்டு தன்அன்றாட பசியைப் போக்கி வருகிறார்.



Updated On: 22 July 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!