/* */

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திமுக அரசை கண்டித்து  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்கள், பேரூர் பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நகரக் செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, இலக்கியம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் ஒன்றிய செயலாளா் என்.ஜி.எஸ் . சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடத்தூரில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ரவி, முன்னாள் நகர செயலாளர் சசிகுமார், கண்ணன் உள்ளிட்ட பலர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சரவணன், தென்னரசு, பி.பி.ரவி, காமதேஷ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன், மணி, புரட்சி தாசன்,அபிபுல்லா, கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பொம்மிடி ரயில் நிலையம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் டோமினிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம் .கே. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலத்தில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசங்கர், ஜிம் முருகன், சாந்தகுமார், சந்திரன், ஜெயபிரகாஷ், மகாலிங்கம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலகோட்டில் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், தலைமையில்,ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் சங்கர் , நிர்வாகிகள் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் அன்பு தலைமையில், பென்னாகரம் நகர செயலாளர் சுப்பிரமணி முன்னிலை திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாகரம் கூட்டுறவு சங்கத் தலைவர் கே. பி. ரவி, முன்னாள் ஊராட்சி செயலாளர் தமிழரசு,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தவுலத் பாஷா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் அஸ்மத், ஜெ. பேரவை நகர செயலாளர் ஈ. சி. கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முனிராஜ் மற்றும் மாதவ சிங், முன்னாள் ஊராட்சி செயலாளர் மு. மணி வண்ணன் , குட்டி @ முனுசாமி நரசிம்மன் லோகநாதன் ராஜேந்திரன் லட்சுமையன் பெருமாள் ரமேஷ் சக்திவேல் முனியப்பன் தேவராஜ் கிருஷ்ணன் ராஜ்குமார் முனுசாமி மூர்த்தி அஜய் முனி செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மொரப்பூர், அரூர்,ஏரியூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனோ தடையுத்தரவு அமலில் இருப்பதால் தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மீது மாவட்டம் முழுவதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 31 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு