/* */

வாக்கு சேகரிப்பில் ஆடைகளுக்கு இஸ்திரி போட்டார் தி.மு.க. வேட்பாளர்

கடலூர் மாநகராட்சியில் 13 வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் இஸ்திரி போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

வாக்கு சேகரிப்பில் ஆடைகளுக்கு இஸ்திரி போட்டார் தி.மு.க. வேட்பாளர்
X

கடலூரில் இஸ்திரி கோட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார் தி.மு.க. வேட்பாளர்.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட தி.மு.க, அ.தி.மு.க,பா.ம க.,வி.சி.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன்முதலாக தேர்தலை சந்திக்கிறது. இந்த சூழ்நிலையில் கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிகள் சார்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் பல வார்டுகளில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 13 வது வார்டில் தி.மு.க. சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ். பி. நடராஜன் என்ற வேட்பாளர் நகரின் பல்வேறு பகுதியில் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்காதா வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும், பகுதி மக்களின் அனைவரது உரிய தேவைகளையும் பூர்த்தி செய்யப்படும் எனவும், தி.மு.க. வின் நல திட்டங்களை எடுத்து உரைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது வார்டு பகுதியை சேர்ந்த இஸ்திரி போடும் நபர் அவரது கடையில் அங்கு இருந்த ஆடைகளுக்கு இஸ்திரி செய்து கொண்டு இருந்தார், அப்பொழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த வேட்பாளர் நடராஜன் அவரது கடையில் ஆடைகளுக்கு இஸ்திரி செய்து வித்தியாசமான முறையில் தி.மு.க. விற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இது அந்த பகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Updated On: 9 Feb 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...