கோவையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை: தடுப்பூசி பணிகள் பாதிப்பு

கோவையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை: தடுப்பூசி பணிகள் பாதிப்பு
பற்றாக்குறை காரணமாக, கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி, கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை நகரில், ப்ரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள சீத்தாலட்சுமி நகர் நல மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருப்பதால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல, கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பற்றாக்குறையால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று பாதிக்கப்பட்டன.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த தியாகராய புது வீதி பகுதியை சேர்ந்த 65 வயதான சுப்பிரமணி கூறுகையில், "45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வந்தேன். ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டதாக கூறினார்.

Tags

Next Story