/* */

நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு

நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு
X

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்தனர்.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உரிமை கரங்கள், சிறகுகள் ஓட்டுநர் சங்கம், சி.ஐ.டி.யு, இண்டிபென்டன்ட் டாக்ஸி, எஸ் எம் மீட்டர் ஆட்டோ ஆகிய ஓட்டுநர் சங்கங்களில் இருந்து நாம் தமிழர் ஓட்டுநர் தொழிற்சங்க பேரவை கீழக்கரணை பாஸ்கர் தலைமையில், செங்கல்பட்டு நாம்தமிழர் கட்சி வேட்பாளர் அகஸ்த்தியா சஞ்சீவிநாதன் முன்னிலையில் 150க்கும் மேற்பட்டோர் அவருக்கு அதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு நகர பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர்.

பின்னர் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூறியபோது: கடந்த காலங்களில் ஓட்டுநர்கள் சார்பில் எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தியபோது ஆளும் கட்சியினர் எங்கள் மீது தடியடி நடத்தி வாழ்வாதாரத்தை சீரழித்தனர். தற்போது ஓட்டுநர் சமுதாயத்தைச் சேர்ந்த அகஸ்த்தியா சஞ்சீவிநாதனை வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது நீண்டநாள் கோரிக்கைகளை அவரிடம் வைத்து தமிழகத்தில் உள்ள ஏராளமான ஓட்டுநர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

Updated On: 29 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு