/* */

செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணி துவக்கி வைத்த கலெக்டர்

செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணி துவக்கி வைத்த கலெக்டர்
X

செங்கல்பட்டு வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், வேம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ஆ. ராகுல்நாத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவும் வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி குறைந்த நீரின் அளவிலேயே காணப்படுகிறது.

இச்சூழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளை மேம்படுத்திட தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. இதே போன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கலெக்டர் ஆ.ராகுல்நாத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வாளர்ச்சித்துறை முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், செயற்பொறியாளர் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Aug 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு