/* */

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில்   வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு  செய்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் குறிப்பாக கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஓலையூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், ஓலையூர் ஊராட்சி மேலத்தெரு காலனியில் ரூ.3.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலை பணி மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணியினையும், ராமர்கோவில் அருகில் ரூ.7.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும், காலனித்தெரு, திரௌபதி அம்மன் தெரு, நடுத்தெரு, பெரிய பண்டாரக்கோவில் தெரு ஆகிய இடங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடு கட்டும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், குப்பத்து வரத்து வாரியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், வீட்டின் கட்டுமானப்பணிகளை விரைவாக கட்டி முடிக்கவும், பணி தொடங்காத பயனாளிகள் பணியினை விரைவாக தொடங்கவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், மேலும் நடைபெறும் பாலப்பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம், மீனாட்சி கோயிலில் உண்டியல் திறப்பு
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு |...
  3. லைஃப்ஸ்டைல்
    முதலிரவில் பாலும் பழமும் ஏன் கொடுக்கிறோம்..? அறிவியலும் கலாசாரமும்..!
  4. நாமக்கல்
    வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்
  5. சினிமா
    சரவணன் - மீனாட்சி இணை பிரியப் போறாங்களா? இப்பதான குழந்தை பிறந்தது?
  6. நாமக்கல்
    நீர்வழிகளை மறைத்து அரசுக்கு வரைபடம்: எஸ்.பியிடம் விவசாயிகள் புகார்
  7. தொழில்நுட்பம்
    குழந்தைகள் உண்மையில் யாரை நம்புகிறார்கள்? அதிர வைக்கும் ஆய்வு...
  8. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...
  9. தொழில்நுட்பம்
    வேற லெவல் டெக்னாலஜி! ஆண் தாவரத்திற்கு ஜோடி தேடும் ஆர்டிபிசியல்...
  10. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...