தி.மு.க. அரசு ஓராண்டு நிறைவு சாதனை விளக்க கண்காட்சி ஆலோசனை கூட்டம்

தி.மு.க. அரசு  ஓராண்டு நிறைவு சாதனை விளக்க கண்காட்சி ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி நடத்துவது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகனைத் தாங்கி என்ற தலைப்பில் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (06.05.2022) நடைபெற்றது.

ஓயா உழைப்பின் ஓராண்டு எண்ணும் தலைப்பில் 10 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகள், பொதுமக்களுக்கு சேவை வழங்க அரசு இ-சேவை மையம் அமைத்தல், உள்ளுர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நெகிழி பயன்பாட்டிடை தவிர்க்கும் வகையிலான மஞ்சப்பைகள், மரக்கன்றுகள் வழங்குதல், மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய கண்காட்சி நடைபெறவுள்ளது.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசினால் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியும், நவீன எல்.இ.டி வாகனம் மூலம் வீடியோப் படக்காட்சி ஒளிப்பரப்பப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு 10 நாட்கள் கண்காட்சியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்டகலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.ரவிசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story