/* */

'மெடிக்கல் காலேஜ் கொண்டுவந்துள்ளேன் ' தாமரை ராஜேந்திரன் பிரசாரம்

அரியலூருக்கு மருத்துவ கல்லூரி கொண்டு வந்த என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று தாமரை ராஜேந்திரன் பிரசாரம் செய்தார்.

HIGHLIGHTS

மெடிக்கல் காலேஜ் கொண்டுவந்துள்ளேன்    தாமரை ராஜேந்திரன் பிரசாரம்
X

340கோடியில் மருத்துவகல்லூரி கொண்டுவந்துள்ளேன். அதிமுகவிற்கு வாக்களியுங்கள், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கிராமங்களில் பிரச்சாரம்

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். இவர் கடந்த எட்டு நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆதிச்சனூர்உள்ளிட்ட 35 கிராமங்களில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். ஆதிச்சனூர், நாச்சியார்பேட்டை, மனக்கதி, வெண்மான்கொண்டான், வடகடல், சுந்தரேசபுரம், கொலையனூர், உல்லியக்குடி, அண்ணாநகர், நத்தவெளி, நரியங்குழி, கோரைக்குழி, சாலை, அணிக்குறிச்சி, சுத்தமல்லி. ஆலம்பள்ளம், புளியங்குழி, காசான்கோட்டை, பாளையக்கரை, கார்குடி, பூவந்திகொல்லை, பாண்டி பஜார், சவேரியார்பட்டி, காரைக்காட்டான்குறிச்சி, வாசனேரி, அழிச்சிகுடி, வாத்திக்குடிகாடு, பருக்கல், நடுவலூர், சமத்துவபுரம், காக்காப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து தாமரை ராஜேந்திரனை வரவேற்றனர்.

மக்களிடையே பேசிய அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன், 'கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் கிராமங்களின் தேவைகள் 80சதவீதம் நிறைவேற்றியுள்ளேன். அரியலூரில் 340கோடியில் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளேன். இனி உயர் சிகிச்சைகளுக்கு வெளியூர் செல்லாமல் அரியலூரிலேயே இலவசமாக மருத்துவம் கிடைக்கும். தமிழக முதல்வர் அரசுபள்ளி மாணவர்களுக்கு கொண்டுவந்து இடஒதுக்கீட்டால் உங்களது பிள்ளைகள் இந்த மருத்துவகல்லூரியில் மருத்துவராக, செவிலியராக கல்வி பயின்று இங்கேயே வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் 20சதவீதம் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் அரியலூர் மாவட்டம் முழு வளர்ச்சி பெற்ற சட்டமன்ற தொகுதியாக, முன்மாதிரி தொகுதியாக மாற்றமுடியும். எனவே எணக்கு அதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் உங்களில் ஒருவாக நான் பணியாற்றவேன்' என்றுகூறி பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது அதிமுக, பாமக, பாஜக கட்சிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.




Updated On: 23 March 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு