/* */

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கோரிக்கை

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு  நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை
X

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா மற்றும் முரளி சங்கர் ஆகியோரிடம், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.


அரியலூர் மாவட்ட நீதிமன்ற ஆய்வு பணிக்காக வருகைபுரிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா மற்றும் முரளி சங்கர் ஆகியோரிடம், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்,

மனுவில் நான் அரியலூர் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் கடந்த 40 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றேன், நான், அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு கட்டிடம் கட்டுவதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், இரண்டு முறை சந்தித்து மனு அளித்துள்ளேன். அவரும் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டிடம் கட்டுவதற்கான தொகையை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்து உள்ளார்.

ஏற்கனவே இந்து அறநிலைத்துறை வசம் இருந்த இடம் நீதிமன்றம் கட்டுவதற்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையால் கட்டிட வரைபடம் தயார் செய்யப்பட்டு, தோராய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, சென்னை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை உயர்நீதிமன்ற பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் தரப்படும் என்றும், பின்னர் தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது நடைமுறையாகும்.

எனவே சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா மனுவில் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!