/* */

அரியலூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி

அரியலுார் மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியை, கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி
X

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான செஸ் போட்டியினை  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 14.07.2022 அன்று பள்ளி அளவில் சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 20.07.2022 அன்று வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 278 பள்ளிகளைச் சேர்ந்த 604 மாணவர்கள், 491 மாணவிகள் என மொத்தம் 1,095 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வட்டார அளவிலான இந்த சதுரங்கப் போட்டியில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும், 11 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் முதல் 03 இடங்களை பெற்ற தலா 18 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 108 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்று 25.07.2022 அஸ்தினாபுரம் மாதிரிப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன் உடனிருந்தார்.

மாவட்ட அளவிலான 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் செந்துறை, ஆண்டிமடம், திருமானூர் ஆகிய வட்டாரங்களில் 03 மாணவர்களும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் திருமானூர், தா.பழூர் ஆகிய வட்டாரங்களில் 03 மாணவர்களும், 11 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் திருமானூர் ஜெயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் 03 மாணவர்களும் என மொத்தம் 09 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

மேலும், மாவட்ட அளவிலான 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவியர்;களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் 03 மாணவியர்களும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவியர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் செந்துறை, ஆண்டிமடம், திருமானூர் ஆகிய வட்டாரங்களில் 03 மாணவியர்களும், 11 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவியர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர், ஆகிய வட்டாரங்களில் 03 மாணவியர்களும் என மொத்தம் 09 மாணவியர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை 9-10 மற்றும் 11-12ஆம் வகுப்பு பிரிவுகளில் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வருகின்ற 06.08.2022 அன்று பார்வையிட உள்ளனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி (அரியலூர்), பேபி (செந்துறை), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.ராஜேந்திரன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 July 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்