திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
குபேரனிடம் கடன் பெற்ற திருப்பதி ஏழுமலையான் (கோப்பு படம்)
அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் எனப்படும் இறைவனின் உலகம் இல்லை. பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை என திருக்குறள் எழுதிய வள்ளுவர் பெருந்தகை தெளிவாக கூறியுள்ளார். நாம் வாழும் இந்த உலகத்தில் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவதோடு, இறைவனின் அருளை பெறவும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி வணங்குவோருக்கு அருளும், பொருளும் அருள்பவர் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதி ஆவார். அவரின் அருளை நமக்கு தரும் ஒரு விஷயத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி நகரத்தில் இருக்கும் திருமலையில் கோயில் கொண்டிருக்கும் ஏழுமலையான் உலகின் செல்வந்த கடவுள் ஆவார். பூலோகத்தில் பத்மாவதி என்கிற பெண்ணாக அவதரித்த மகாலட்சுமி தேவியை மணமுடிக்க அந்த நாராயணன் இந்த திருப்பதி திருமலைக்கு வந்த போது, பத்மாவதி தாயாரை திருமணம் செய்ய மிகுந்த பொருள் அவருக்கு தேவைப்பட்டது. அதற்கான எண்ணிலடங்கா செல்வத்தை செல்வத்தின் அதிபதி ஆன குபேரனிடம் கடனாக பெற்றார்.
தான் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி தர நினைத்த பெருமாள் திருமலை கோயிலில் தனது தரிசனத்தை பெற்று நன்மையடையும் பக்தர்கள், தனது கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் செல்வத்தை கொண்டு தான் வாங்கிய கடன் மற்றும் வட்டியை குபேரனுக்கு திருப்பி செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அப்போது குபேரன் திருமலை கோயிலில் அருள்பாலிக்கும் வெங்கடாசலபதிக்கு தனவரவு பெருக தனது யோக சக்தியால் உருவேற்றப்பட்ட தன ஆகர்ஷண யந்திரம் ஒன்றை வழங்கினார். இந்த தன ஆகர்ஷண யந்திரம் ஏழுமலையானின் சந்நிதியில் இருக்கிறது. இதன் சக்தி காரணமாகவே திருமலை கோயிலில் ஒரு நாளைக்கு பல கோடி ருபாய் உண்டியல் காணிக்கை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். மேலே நாம் காணும் படத்தில் இருப்பது பலரும் எளிதில் காண இயலாத திருமலை கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் குபேர தன ஆகர்ஷண யந்திரம் ஆகும்.இதை தரிசிப்பவர்களுக்கு தங்களின் வாழ்வில் பணவரவிற்கு குறை ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu