Milaku Parikaram in Tamil -மிளகு பரிகாரம் தெரியுமா? தெரிஞ்சுக்கங்க..!

Milaku Pariharam in Tamil
நமக்கு நேரமே நன்றாக இல்லை. வாழ்க்கையில் எல்லாமே கெடுதலாகவே நடக்கிறது. வாழ்க்கையில் கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இதுதான். நிறைய முறை தோல்வி அடைந்து விட்டோம். முயற்சியில் இது கடைசி முறை. இதிலும் தோல்வி அடைந்து விட்டால் நமக்கு வாழ்க்கையே கிடையாது, என்ற ஒரு சந்தர்ப்பம் எல்லா மனிதர்களுக்கும் வரும். இந்த கஷ்டமான நேரத்தை கடந்து செல்வதில் ஒரு பெரிய சிரமம் இருக்கும்.
Milaku Pariharam in Tamil
இதை பெரும்பாலும் நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். கடைசி நிமிஷத்தில் ஜெயிக்க வேண்டும். இந்த கெட்ட நேரத்திலிருந்து எப்படியாவது மீண்டு திரும்பவும் வர வேண்டும் என்றால் நான் என்ன செய்வது. இக்கட்டான சூழ்நிலையில் உங்க கெட்ட நேரத்திலிருந்து உங்களை காப்பாற்ற இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும். அது என்ன பரிகாரம் என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
கெட்ட நேரத்திலும் நல்லது நடக்க பரிகாரம்
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் கையில் 3 மிளகு வச்சுக்கணும். குலதெய்வத்தை நினைத்து இந்த மூன்று மிளகை கையில் வைத்துக்கொண்டு, நல்லது நடக்கணும் நல்லது நடக்கணும், என்று ஆழ்மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்களுக்கு கெட்ட நேரத்தில் வரக்கூடிய பாதிப்புகளை இந்த மிளகு குரைக்கும். கர்மவினையால் தான் கெடுதல் நடக்கிறது.
Milaku Pariharam in Tamil
கெடுதலை முழுசாக நடத்த விடாமல் தடுக்க முடியாது. அந்த கெடுதலின் பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். பெரிய விபத்தில் உயிரே போய் இருக்கும் என்று நினைப்போம். ஆனால் கை கால் முறிவோடு உயிர் பிழைத்திருப்போம். இதைத்தான் கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் என்று சொல்லுவார்கள். இப்படி உங்களை காப்பாற்ற இந்த மிளகு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் போகும் விஷயம் என்று பயப்படாதீங்க.
கெட்ட நேரத்தில் நமக்கு இப்படிப்பட்ட பிரச்னைகளும் வரும். பத்து வேலைக்கு இன்டர்வியூக்கு போயிருப்பாங்க. 11ஆவது வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையை வாழ்ந்து பிரயோஜனமே இருக்காது என்ற எண்ணம் வரும். அடுத்த வேலைக்காக இன்டர்வியூக்கு போகும் போது மூன்று மிளகை , குலதெய்வத்தை நினைத்து எடுத்துச் செல்லுங்கள். நிச்சயம் வேலை கிடைக்கும்.
Milaku Pariharam in Tamil
வியாபாரத்தில் புதுப்புது காண்ட்ராக்ட் பிடிக்க, ரொம்ப ரொம்ப சிரமம் இருக்கும். கெட்ட நேரத்தில் நிறைய நஷ்டம் வரும். தினமும் கடைக்குப் போகும் போது தொழிற்சாலைக்கு போகும்போது மூன்று மிளகை கையோடு எடுத்துச் செல்லுங்கள். குலசாமியின் பெயரை மனசுக்குள் சொல்லிக் கொண்டே இருங்க. இன்று நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.
நல்லது நடக்கும். லாபம் பெருகும். திருமணத் தடை, குழந்தை பாக்கிய தடை, படிப்பில் பிரச்னையை, தீராத நோய் நொடி பிரச்சனைக்கு ட்ரீட்மென்ட்க்கு போறீங்க. இப்படி எந்த தடையாக இருந்தாலும் அதை தகர்க்க கூடிய சக்தி மிளகுக்கு உண்டு. இப்படி எடுத்துச் செல்லக்கூடிய மிளகை என்ன செய்வது.
தினமும் அந்த மிளகை கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். தினமும் புதிய மிளகை தான் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். தினமும் இந்த மிளகை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்னைக்கு தீர்வு கிடைக்க முயற்சி செய்யும் சமயத்தில் இதை கையில் வச்சுக்கோங்க. மிளகுக்கு அப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது.
Milaku Pariharam in Tamil
கெடுதலை அழிக்கக்கூடிய ஆற்றல், கடனை அழிக்க கூடிய ஆற்றல் மிளகுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த மிளகை வைத்து பைரவர் கோவிலில் தீபம் ஏற்றுகின்றோம். அப்பேர்ப்பட்ட மிளகு உங்கள் கையில் இருந்தால் கெட்ட நேரத்திலும் உங்களுக்கு பெரிய அளவில் கெடுதல் நடக்காது என்பது ஒரு நம்பிக்கை.
உங்களுக்கு பிரச்னை இருக்கும்போது மிளகை கையில் எடுத்துச் செல்லுங்கள். நீங்களே இந்த மிளகின் மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வீர்கள். நம்பிக்கைதாங்க வாழ்க்கை. நம்பிக்கையோடு எதையும் செய்ங்க. வெற்றி நிச்சயம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu