/* */

இன்று புண்ணியக் கணக்கு எழுதுவோம் வாங்க.....!

சித்திரா பௌர்ணமியான இன்று சித்திர குப்தனின் ஏட்டில் நமது முதல் பக்கத்தில் புண்ணிய கணக்கை சித்திரகுப்தரால் எழுத வைப்போம்.

HIGHLIGHTS

இன்று புண்ணியக் கணக்கு எழுதுவோம் வாங்க.....!
X

சித்திரா பௌர்ணமி ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது தான் நம் புண்ணியங்கள் பெறுவதற்கான முதல்வழி. அன்னதானம் செய்வோம்.

சித்ரா பௌர்ணமி என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, அல்லது சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

சித்திரா பௌர்ணமி புராண கதையை பார்ப்போம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்து தாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ரா பௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவ புண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.

சித்ரா பௌர்ணமி சிறப்பு: இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் என கொண்டாடப்படுகிறது.

செவ்வாய் தோஷம் நீங்கும்: நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர். எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும். நவக்கிரக தோஷங்கள், பாவ விமோசனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னை தினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

தோஷம் போக்கும் சித்ரகுப்தன்: நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால் தான் ஜோதிட சாஸ்திரம், "ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்" இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இங்கு இவரை தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல பலன் கிடைக்கும். அன்னதானம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகள் காற்றோடு கரையும் கற்பூரம் போல, காணாமல் போகும்.

Updated On: 23 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...