பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
ஆன்ம பலம் பெறுதல் (கோப்பு படம்)
ஸ்தூல தேகத்திலுள்ள நாடிகளனைத்தையும் சூக்கும தேகத்தில் அமைத்துள்ள நாடிகள் கட்டுப்படுத்த வல்லவை. பிராணனை வசப்படுத்தி, அதனை வலிமைப்படுத்துவதால் சூக்கும தேகத்தில் அமைந்துள்ள நாடிகள் வலிமையடைவதோடு, அவற்றின் இயக்கங்களும், ஸ்தூல தேகத்தில் உள்ள நாடிகளோடான இணக்கமும் சிறப்பாக அமையும். இதனால் நம் ஆதாரச் சக்கரங்களின் இயக்கமும் சீராக விளங்கும்.
நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.
பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.
இதில் எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல் உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.
சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும். 10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும். 9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். 8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான். 7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான். 5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும். 4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும். 3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும். 2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும். 1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம் உண்டாகும். ஆகவே ஆரோக்கிய வாழ்விற்கு மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu