Sad tamil death kavithai-இறப்பது மட்டும் மரணமல்ல, மறப்பதும் மரணம்தான்..!

Sad tamil death kavithai-இறப்பது மட்டும் மரணமல்ல, மறப்பதும் மரணம்தான்..!
X

Sad tamil death kavithai-சோக மரண கவிதைகள் (கோப்பு படம்)

பிரிவு தரும் வலி ஆற்றமுடியாதது. அதனால்தான் அதை ஈடுசெய்யமுடியாத இழப்பு என்கிறார்கள்.

Sad tamil death kavithai

பிறப்பைகொண்டாடும் மனிதன் இறப்பின்போது கண்ணீர்விடுகிறான். மீண்டும் பார்க்கப்போவதில்லை என்று வருத்தம். பிரிவு என்பது துன்பத்தின் வலி. அந்த வலி ஏற்படுத்துவதுதான் கண்ணீர். மரணம் எப்படி வலியை ஏற்படுத்துமோ அதே அளவு ஒருவரின் பிரிவும் அப்படித்தான்.

இதயத்தில் சுமந்து காதலித்த காதலி, பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக தூக்கிவீசி சென்றுவிட்டால், அந்த துன்பம் தாங்கமுடியாதது. பெற்றோரிடம் கேட்டா காதலித்தாய். வாழ்க்கை முழுவதும் கைகோர்த்து வருவேன் என்று உறுதி அளித்த அவள், கைதூக்கி டாட்டா காட்டிச் சென்றுவிட்டால் அந்த பிரிவும் மரணத்திற்கு ஒப்பாகும். அவன் சொல்கிறான். நான் இன்னொரு முறை சாவதில்லை என்று.


Sad tamil death kavithai

இப்படி மரணத்திலும் பிரிவிலும் ஏற்படும் வலிமிகுந்த கவிதைகளை படித்து பயன்பெறுங்கள். பிரட்டுக்கு நீங்கள் வலியை ஏற்படுத்திவிடாதீர்கள்.

காதலித்த நாங்கள் இருவரும் ஊர்வலத்தில் தான் இருக்கிறோம். ஆமாம், அவளுக்கு கல்யாண ஊர்வலம். எனக்கு இறுதி ஊர்வலம்...!

நான் இறந்த பின் தயவுசெய்து என் கண்களை மூடி விடாதீர்கள். எனக்கு அஞ்சலி செலுத்த வந்தாலும் வருவாள். கடைசியாக ஒருமுறை பார்த்து விட்டுச் சென்று விடுகிறேன்.

அவள் என் காதலை புரிந்து கொண்டு என்னைத் தேடி வருகிறாள். கையில் மலர் வளையத்துடன், உறவுகள் மண் இட்டு மூடிவிட்டனர். இல்லை என்றால் எழுந்து வந்திருப்பேன், அவள் வருகைக்காக காத்திருந்த நான்.

என் வாழ்க்கை என்ன ஓரங்க நாடகமா? நாடகத்தில் என்னை மட்டும் நடிக்க விட்டு தனியே சென்று விட்டாய்..!


Sad tamil death kavithai

பயப்பட வேண்டாம், நான் இறந்து விடுவேன் என்று. அவள் என்னை வேண்டாம் என்று உதறிய அன்றே நான் இறந்து விட்டேன். மீண்டும் ஒருமுறை இறப்பதற்கு சாத்தியம் இல்லை.

என் இதயம் என்ன மண் பானையா? நான் அன்பு செய்த அனைவரும் உடைத்து விட்டே செல்கின்றனர்.

நேற்று அவள் இன்று நீ. ஆனாலும் ஒட்டி வைத்திருக்கிறேன், தயாராக மீண்டும் உடைபடுவதற்கு.

என் மனதை நீங்கள் உடைப்பது பற்றி எந்த கவலையுமில்லை எனக்கு. உடைந்த சிதறல்கள் உங்களை காயப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


Sad tamil death kavithai

ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி, அவர் இல்லை என்று ஆனவுடன் அளவுக்கு அதிகமாகி விடுகிறது, மறக்க முடியாத வலிகளாக.

என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தால் கூட சிறிது நாட்களில் மறந்திருப்பேனடி. பிடித்திருக்கிறது என்று சொல்லி என்னைப் பித்து பிடிக்க வைத்து விட்டாயடி.

பிரிந்து போன உன்னையும் இறந்து போன நம் காதலையும் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது உன் நினைவுகளை, எந்த மின்கல சக்தியும் இல்லாமலேயே.

சூழ்நிலை சில நேரங்களில் பேச விடுவதில்லை. பேசினால் கேட்பதும் இல்லை. நீயாவது நிம்மதியாக வாழ்ந்து விடு என்று விலகிச் செல்ல கற்றுக்கொடுத்துவிடுகிறது, காலம்.


Sad tamil death kavithai

நல்லவன் கெட்டவன், ஏழை, பணக்காரன் என்ற பேதம் பார்க்காத ஒரே நீதி இருக்கும் ஒரே இடம் மரணத்தின் முன் மட்டுமே.

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடியே நாம் தீர்த்தாலும் ஒரு நாள் அடங்கிப் போகும் நம் ஆட்டம் அனைத்தும். அது தான் நம் மரணம்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும் தருணம் அது தான் "மரணம்".

இதயம் துடிக்க மறுத்து நம் ஆத்மா அடங்கி ஆன்மா எழுந்து போகும் தருணம் அதுவே மரணம்.


Sad tamil death kavithai

எதிர்பாராமல் எதிர் பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வருவது தான் மரணம்.

வாழ்க்கை என்னும் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் இறுதிப் பாடம் "மரணம்".

மூச்சை இழுக்க மறந்தால் 'மரணம்'. இழுத்த மூச்சை விட மறந்தால் 'மரணம்'.அவ்வளவு தான் "வாழ்க்கை" கொடுத்தவன் எவனோ எடுத்தவனும் அவனே. உயிர் கொடுத்து உடல் கொடுத்து ஆசைகள் பல விதைத்து விட்டு, செடியாகி மரமாகி காயாகி கனியாகும் முன் எடுப்பதை என்ன சொல்வது. "கொடுத்தவன் கெடுத்தான் ; கெடுத்தவன் எடுத்தான்".


Sad tamil death kavithai

இப்படித் தான் காதல் இருக்கும் என அன்றே அறிந்திருந்தால், உன்னைக் காதலிக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்.

நினைவோ நிஜமோ, காதல் மட்டுமே என்றும் நீங்காத வலியைக் கொடுக்கும்.

ஆண்டுக்கு ஆண்டு வரும் போகியின் போதெல்லாம் நான் எரிக்க நினைத்தும் என்னால் எரிக்க முடியவில்லை, உன்னோடு பழகிய இனிய நாட்களை

இதயத்தில் நீ இருந்தால், மறக்க முயற்சிக்கலாம். இதயமே நீயாக இருப்பதால், எப்படி மறக்க முடியும்?


Sad tamil death kavithai

காலம் கடல் அலையாக இருந்திருக்கக் கூடாதா? உன்னைப் பிரிந்து சென்றாலும், மீண்டும் உன்னோடு கலந்துப்போக.

பிடிவாதம் தலைத் தூக்கும் போதெல்லாம், தூரமாய் விலகிச் சொல்கிறது நம் இருவருக்கும் இடையே உள்ள காதலை.

உன்னை ஏன் அன்று பார்த்தேன் என்று, இன்று வருத்தப்படுகிறேன். அதன் விளைவு இப்போதுதான் புரிகிறது. வலி வேதியியல் மாற்றமாய் வினைபுரிகிறது.

நிரந்தரமில்லா உலகில், சில உறவின் பிரிவு நிரந்தரமான வலியை நம் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்று விடுகின்றன, ஆறாத வடுவாக.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!