மொக்க ஜோக்ஸ் தான். சிரிங்க பாஸ்

மொக்க ஜோக்ஸ் தான். சிரிங்க பாஸ்
X
மொக்கை என்றாலும் இந்த ஜோக்குகள் நம்மை சிரிக்க வைக்கும்

மொக்க ஜோக்கு என்றாலே அது ஒரு தனி ரகம். வடிவேலு சொல்வது போல ' எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க' ரகம். உங்களுக்காக சில மொக்க ஜோக்ஸ்


நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால லோக்கல் கால், எஸ்டிடி கால், ஐஎஸ்டி கால், ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியது!

திருவள்ளுவர் 1330 குறள் எழுந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்

"என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பாக்க முடியுமா?"

மீன் பிடிக்கிறவன் மீனவன்-ன்னு சொல்லலாம். நாய் பிடிக்கிறவனா நாயவன்-ன்னு சொல்ல முடியுமா?

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவன துப்பாக்கிக்குள்ள போடமுடியாது

தேள்கொட்டினா வலிக்கும்... பாம்பு கொட்டினா வலிக்கும்.. முடி கொட்டினா வலிக்குமா?

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்..காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

பொங்கலுக்கு அரசுல லீவு குடுப்பாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?!

கோலமாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போட முடியுமா?

லைஃப் ல ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்... தலைல ஒண்ணுமே இல்லேனா கிளேர் அடிக்கும்..

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும்... பாஸ்ட் ஃபுட் கடையிலே நின்னுகிட்டு தான் சாப்பிடணும்!

இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சு பொறியாளர் ஆகலாம், பிரசிடென்சி காலேஜ்ல படிச்சு பிரசிடெண்ட் ஆக முடியுமா?!

ஆட்டோக்கு ஆட்டோனு பேர் இருந்தாலும் மேனுவல் ஆ தான் டிரைவ் பண்ண முடியும்..


தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்... ஆனா... இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

வாழ மரம் தார் போடும்! ஆனா அத வச்சி ரோடு போடா முடியுமா?

'ஹேண்ட் வாஷ்'ன்னா கை கழுவறது, 'ஃபேஸ் வாஷ்'ன்னா முகம் கழுவுறது , அப்போ 'ப்ரைன் வாஷ்'ன்னா மூளை கழுவுறதா?

டீ கப்பில் டீ இருக்கு. அப்ப உலக கோப்பைல உலகம் இருக்குமா?

செல் மூலமா எஸ்எம்எஸ் அனுப்பலாம், ஆனா எஸ்எம்எஸ் மூலமா செல்ல அனுப்ப முடியாது?

பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவ ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

பல் வலி வந்த பல்ல புடுங்கலாம்....ஆனா... கால் வலி வந்த கால புடுங்க முடியுமா?! இல்ல தலை வலி வந்தா, தலைய புடுங்க முடியுமா?

சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும், ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட்டால் விபரீதமா ஆயிடும் !!!

ஹோட்டல் ல காசு குடுகளனா மாவட்ட சொல்லுவாங்க, பஸ் ல காசு குடுகளனா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

பால் போடுறவர் பால்காரர், பேப்பர் போட்றவர் பேப்பர்காரர். , பிச்சை போட்ராவர் பிச்சைக்காரனா ?

என்னதான் ஃபேன் ஸ்பீடா சுத்தினாலும் அதுக்கு மயக்கம் வராது.

புறப்படும்போது ஏரோபிளேனை அழைக்கிறோம், ஆனால் தரையிறங்கும் போது ஏன் எரங்கோபிளேனை அழைக்கவில்லை?

குண்டூசி எவ்ளோ ஒல்லியா இருக்கு, அப்றம் யென் எல்லாரும் அதா குண்டூசி னு சாலிரங்க..

Tags

Next Story
சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா.. இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் சீர்வரிசை