love failure kavithai in tamil கண்ணா....காதலிச்சு பாரு... கஷ்டம் தெரியும்... காதல்....காதல்.... காதல்.... காதல்... காதல்.....

love failure kavithai in tamil  கண்ணா....காதலிச்சு பாரு... கஷ்டம் தெரியும்...  காதல்....காதல்.... காதல்.... காதல்... காதல்.....
X
love failure kavithai in tamil காதல் என்பது உணர்வுகள் சார்ந்தது. இனக்கவர்ச்சி அல்ல. உண்மையான காதல் என்பது உணர்ச்சிகரமானது... ஆத்மார்த்தமானது... அன்புமிகுந்தது.


love failure kavithai in tamil


love failure kavithai in tamil

காதல்ஓய்வதில்லை.... காதலிக்க நேரமில்லை.... இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் சினிமா பட பெயர்கள். ஆனால் பெயர்களிலேயே காதலின் மகத்துவத்தினை சொல்லியுள்ளனரே. அப்போது காதலித்தால் என்ன என்ன பிரச்னைகளை சந்திக்க நேரிடும்... அதற்காகவே இந்த தலைப்பு தரப்பட்டுள்ளது... காதலிச்சு பாரு... கஷ்டம் தெரியும் என... ஆமாங்க...காதல்னா சும்மாவ... அப்படி என்னங்க காதலில் இருக்குது ? சொல்லுங்க... பார்ப்போம்...சொல்றேன் கேளுங்களேன்...

காதலுக்கு கண் இல்லைங்க... காதல் வயசு வித்தியாசம் பார்க்காதுங்க... நான் சொல்றது எல்லாமே நல்ல காதல் மட்டுந்தானுங்க...நீங்க வேற எதையாவது நினைச்சு குழப்பிக்காதீங்கோ...கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தாலே காதல்னு சினிமா பாட்டே சொல்லிடுச்சுங்க...இருமனங்கள் சங்கமித்தால் அதுதாங்க காதலின் ஆரம்பம்... அப்புறம் பாருங்க... இவங்க இம்சையை... பார்க்காம இருக்க முடியாதுங்க... படுத்தா துாக்கம் வராதுங்க.. என்ன செய்ய? இப்போவாவது ஸ்மார்ட் போன்னு ஒரு கருவி இருக்குதுங்க.. வீடியோ காலில் முகத்தினை பார்த்துக்கலாம். ஆனா அக்காலத்து காதலர்கள் என்ன செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா...

எல்லாமே லெட்டர்ஸ்தானுங்க... லவ் லெட்டர்னே பேருங்க... இதையெல்லாம் எப்படி போஸ்ட் பண்ண மாட்டாங்க... புத்தகத்திலோ அல்லது பொடியன்களிடமோ கொடுத்து தகவல் பரிமாற்றம் நடக்கும்ங்க... ஊர்த்திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இவர்கள் நேரடி சந்திப்பு நடக்குமுங்க... உறவு முறை என்றாலும் யாருக்கும் தெரியாம காதலிச்சாங்க...இப்ப மாதிரி பப்ளிக்கா தோள் மேல் கைபோட்டுக்கொண்டு சந்திச்சதில்லைங்க... அப்ப காதலிச்சவங்க எல்லாமே சமூகம் மற்றும் உறவுகளுக்கு பயந்து காதலிச்சாங்கன்னுகூட சொல்லலாம். ஆனா... பயத்தை கழற்றி வெச்சுட்டு போன மாதிரி யாரைப்பத்தியும் கவலைப்படாம ஜோடி சேர்ந்து சுத்தறது பார்க்க முடியுதுங்க...

அந்த காலத்தில காதல் தோல்வியில் முடியுது அப்படின்னா இரண்டு பேருமே விபரீத விளைவு தேடிடுவாங்க.. ஆனா இப்போ இருக்கிற காதல்ல உண்மை இருக்கான்னு சற்ற சந்தேகமே வருதுங்க.. உணர்வு பூர்வமான காதல் இப்போதைய காதல் இல்லைன்னு கூட சொல்லலாம். எல்லோரையும் அப்படி சொல்லிட முடியாது... அதாவது இனக்கவா்ச்சியால் காதலிப்பவர்களிடம் சுயநலம் இருக்கறத பாக்க முடியுதுங்க...

love failure kavithai in tamil


love failure kavithai in tamil

ஒண்ணும் இல்லீங்க.. நேற்றைய செய்தி.. மதுரையில் காதலித்துவிட்டு கர்ப்பமாக்கிய பின் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்ய போன காதலனை போலீசோடு சென்று திருமணத்தினை நிறுத்தியுள்ளார் காதலி. பின்னர் அந்த பெண்ணையே திருமணம் செய்வதாக அந்த காதலன் உறுதிசொல்லியுள்ளார்.இதுபோல் எல்லாம் அப்ப நடந்தது இல்லீங்க... அந்த வீரப்பெண்ணை பாராட்டித்தான் ஆக வேண்டும்...

காதல் தோல்வி கவிதைகள்......

நினைவெல்லாம் நீயாகவே இருக்கிறாய்...

நினைத்தாலும் இனி நீ வர மாட்டாய்...

என்னவளே... என்னை மறந்தது ஏனோ...

என்னவளே... என்னை மறந்தது ஏனோ...

வானத்தில் கதிரவன் கூட உதிக்காமல்

இருந்தால் என்ன நடக்கும்?......அதுபோல் உ

நீ ரோட்டில் நடக்காமல் இருந்தால்

என் நெஞ்சம் பதைக்கிறதே... என்னவளே...

உன்னைக் காணாமல்... உன்னைக்காணாமல்...

காதலுக்கு கண் இல்லை என்று சொன்னார்கள்

அப்போது எனக்கு தெரியவில்லையே??

நீ மறு கண்ணை என் மேல் காட்டவில்லை யென்று?

கண்களிருந்தும் நான் பார்வையற்றவனாகிவிட்டேன்

எனக்கு எதைப் பார்த்தாலும் உன் திருமுகமே தெரிகிறதே

நான் என்ன செய்வேன்- இதற்கு தீர்வுதான் என்ன?

என் வாழ்நாள் முழுக்க இப்படியே செல்லுமா?...சொல்...

love failure kavithai in tamil


love failure kavithai in tamil

வாக்கியத்தில் வார்த்தை விடுபட்டால் முடியாது

காதலில் அவள் இல்லாவிட்டால் எதுவும் முடியாது...

அதிரடி மின்மினி பூச்சியாய் வந்தாயே? எங்கு சென்றாய்..

கானல் நீர் போல் உடனடியாக மறைந்துவிட்டாயோ?

நான் பார்க்கும் அன்றாட வேலைகள் கூட சுமையில்லை

நீ இல்லாத நாட்களின் தனிமைதான் எனக்குபெரும் சுமை

பனிக்காலத்தில் கூட எனக்கு சுடுகிறது... நீ இல்லாததால்...

உன் திருமுகத்தினைக் காணாததால் துாக்கம் தொலைத்தேன் .

..உன்னைக் கண்டவுடன் என்

மனதை தொலைத்தேன்... மனதை தொலைத்தேன்..

இன்னும் எத்தனை தொலையப் போகிறதோ?....

அட பைத்தியக்காரா... யார் மீதும் பாசம்

வைக்காதே... இது வேஷம் போடும் உலகம்

உண்மைக்கு மதிப்பில்லை...சொல்லுக்கு

மரியாதையில்லை... காதலுக்கு எப்படி?...

love failure kavithai in தமிழ்




love failure kavithai in tamil

சுயநலம் பெருகிவிட்ட காலத்தில் நீ போய்

காதல்.. கத்தரிக்காய்...என்று சொல்கிறாயா?

மடையனே... உன்னை மதிப்பவளை விரும்பு...

ஏறி மிதிப்பவளை விரும்பாதே... வீணாகிவிடுவாய்..

கனவு தான் கண்டிருப்பேனா?...காதலிக்கிறோம் என்று...

காரணம்...எப்போது பார்த்தாலும் உன்னை பார்க்க

முடியவில்லையே?... முயற்சித்தாலும்... முடியலையே...

காலங்கள் உருண்டோடினாலும் நம் காதல் ஒரு

நாள் ஜெயிக்கும் என்றுதானிருந்தான்...

ஏமாற்றி விட்டு சென்றுவிட்டாயே...விண்ணுலகம்..

உனைக் காலன் அழைத்தது ஏனோ... பிரிவு தாங்கலையே...

பசிக்கிற நேரத்தில கிடைக்கிற உணவு அமிர்தம்

வெறுக்கிற நேரத்தில் கிடைக்கிற அன்பு விஷம்..

என்னவளே... என்னவளே... என்னவளே....

காதலித்தால் மனசு வலிக்குமே... உனக்கு?

காதலிச்சவ எல்லாருமே இப்படித்தானோ...

புலம்பல்களும்.... கனவுகளுமாய்.. மாறுமோ?

love failure kavithai in tamil


love failure kavithai in tamil

ஏ...பெண்ணே...என் நினைவிலிருந்து போய்விடு

உறக்கம் வராத நேரத்தில் கனவில் வராதே...இனி...

இரு கண்களுமே காய்ந்து போகட்டும்...அப்போதுதான்

கண்ணீருக்கும் பற்றாக்குறையாகும்... அழாமலிருக்க...

சாதி, மத, பேதம் பார்க்காமல்தான் காதல் ஜெயிக்குது...

ஆனா ...நம்ம காதல் மட்டும் ஏன் தோற்றது? என்னவளே...

உன் நினைவினால் என்னை மறந்தேன் என்னவளே...

என்னை நினைத்தாயோ... விக்கல் சதிராட்டமாடுகிறதே?

விக்கும்போதெல்லாம் உன் விழிகள் என் கண் முன்னே...

நீ நினைத்திருப்பாய்...என ஏமாந்து போனேன்?-.....

நீ விலகிச் செல்கிறாய்... என நான் முன்னே அறிந்திருந்தால்

உன்னை மறந்திருப்பேனோ?,.... வலி இல்லாமல்.....

நீ பிரிந்து சென்றாலும் உன் பிரியங்கள் எனைவிட்டுபோகாது.... காலம் கடந்தாலும்

மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆறாது...வடுவாக...

காதல்... காதல்... காதல்...காதல்...

சாதல்... சாதல்...சாதல்... சாதல்...

இரண்டுக்குமே மூன்றெழுத்துக்கள்தான்

என்ன செய்ய? நீ பிரிந்துவிட்டாயே?

என்னவளே...நீயே சொல்... நீயே சொல்...

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி