Importance Of Bath In Tamil குளிக்காம இருந்தால் நம் உடம்பு என்ன ஆகும்?....உங்களுக்கு தெரியுமா?....
![Importance Of Bath In Tamil குளிக்காம இருந்தால் நம் உடம்பு என்ன ஆகும்?....உங்களுக்கு தெரியுமா?.... Importance Of Bath In Tamil குளிக்காம இருந்தால் நம் உடம்பு என்ன ஆகும்?....உங்களுக்கு தெரியுமா?....](https://www.nativenews.in/h-upload/2023/12/15/1832245-15-dec-bath-image-6.webp)
Importance Of Bath In Tamil
நாம் நம் உ டலின் துாய்மைக்காகவே தினந்தோறும் குளிக்கிறோம். நம் உடலி்லுள்ள வியர்வை , அழுக்குகள் இதனால் வெளியேற்றப்பட்டு சுத்தமாகிறது. ஆனால் ஒரு சிலர் மாத கணக்கில் கூட குளிக்காமல் இருப்பார்கள். அவர்களிடம் அருகே சென்றாலே ஒரு வித வியர்வை நாற்றம் வரும்.
Importance Of Bath In Tamil
ஆனால் ஒருசிலரின் இயற்கை உடம்பு வாகு வியர்வை அதிகம் வரும் என்பதால் இரண்டு முறை குளித்தே ஆக வேண்டும் என குளிப்பார்கள். ஒரு சிலர் கடமைக்காக குளிப்பதும் உண்டு. தினமும் நீங்கள் குளிக்காவிட்டால் என்னென்ன நடக்கும் , ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் நடக்காது என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.
Importance Of Bath In Tamil
நீங்கள் தினமும் குளிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுங்களா? தினம் குளிக்காவிட்டால் உங்களுடைய உடலின் தோலில் ஈரப்பதம் குறைந்துவிடும். தோலின் மேற்புறம் உப்பு திட்டு போன்று உருவாக ஆரம்பித்துவிடும். இதனால் அலர்ஜி போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதுமட்டும் அல்லாமல் உங்கள் உடலில் அதிக தொற்றுகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும் . இவ்வளவுதாங்க.. அப்புறம் தோல் டாக்டரை தேடித்தான் அலையணும். சரிங்க நீங்க தொடர்ந்து 2 நாட்கள் குளிக்காமல் இருந்தால் உங்கள் உடம்பில் ஆயிரம் வகையிலான பாக்டீரியாக்களினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் ஏற்படும்.
Importance Of Bath In Tamil
நாம் தினமும் குளிப்பது எதனால் தெரியுமா? நம் உடலில் உண்டாகும் நோய்க்கிருமிகளை அழிப்பதற்காகவே நாம் தினமும் சோப்பு போட்டு குளிக்கிறோம். இயல்பாகவே நம் உடம்பில் தானாகவே ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இது மிகவும் தீய வகையான பாதிப்பினை நமக்கு உண்டாக்கும் பாக்டீரியாக்களின் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
எப்படி குளிப்பது?
குளிப்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.ஒருசிலர் அரை மணிநேரத்திற்கும் மேலாக நன்கு தேய்த்து குளிப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ உள்ளே சென்றவுடன் 5 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். காக்கா குளியல்தான். நாம் அன்றாடம் குளிப்பதால் நம் உடலை மேலும் வலுப்படுத்த முடிகிறதுரு. இயற்கையாகவே நாம் குளிக்கும்போது நம் உடலின் அனைத்து உறுப்புகளையும், பகுதிகளையும் சோப் போட்டு நன்கு தேய்த்து ஒருமுறைக்கு இருமுறை குளிக்கவேண்டும். அதுவும் நம் உடம்பின் உறுப்புகளின் இடுக்கு பகுதிகளில்தான் கிருமிகள் தேங்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த இடுக்கு பகுதிகளை நன்கு தேய்த்து குளிப்பது சாலச்சிறந்தது.
Importance Of Bath In Tamil
ஒருசிலர் உடம்பு சரியாகவிட்டால் குளிக்கவே மாட்டார்கள். குளித்தால் சளி பிடித்துவிடும். அது முற்றிலும் தவறு. சரியான பதத்தில் சுடுதண்ணீர் வைத்து அனைத்து பாகங்களையும் நன்கு தேய்த்து குளித்தால் அதிலேயே பாதி உடம்பு சரியாகிவிடும். குளிக்காமல் இருந்து பாருங்களேன். ஏதோ போல் இருக்கும். சோம்பேறித்தனம்தான் அதிகப்படும். அதுவே குளித்து பிரஷ் ஆகி விட்டால் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும்.
Importance Of Bath In Tamil
ஒரு சிலர் உடலில் வியர்வை வராவிட்டால் குளிக்காமலேயே இருந்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். வியர்வை சுரக்காவிட்டாலும் நம் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் நமக்கு பாதிப்பு ஏற்படும். குளிர்காலமாக இருந்தாலும் தினந்தோறும் குளிப்பது நம் உடல் ஆரோக்யத்தை மேலும் மேம்படுத்தும். அதுவும் கொரோனா காலத்தில் வெளியே சென்று வந்தவுடன் குளித்தவர்கள் நம்மில் எத்தனைபேர்? கொரோனாவ ருவதற்கு முன்பாகவே தமிழக பழைய சினிமாக்களை பாருங்கள் ஒரு முற்றத்தில் பெரிய அண்டா வைத்திருப்பார்கள். கால் அலம்பாமல் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். எல்லாமே நம் முன்னோர்கள் ஏற்கனவே செய்ததுதாங்க. நாம் நாகரிகம் என்ற பெயரில் அதனை விட்டுவிட்டு பிறகு இப்போது மீண்டும் பிடித்துள்ளோம். அது சரி வீட்டுக்கு முன்னர் எத்தனை பேர் இன்று சாணி தெளிக்கிறாங்க... எதற்கு தெளித்தார்கள். மாட்டின் சாணத்திற்கு நோயை விரட்டியடிக்கும் குணம் உண்டு. அது எந்த கிருமிகளையும் நம் வீட்டினுள் அண்ட விடாது என்பதால்தான். உங்களுக்கு தெரியுமா?-இப்ப சாணத்தைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறதே...அப்புறம் ஏங்க நோய் நம்மை தாக்காது....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu