சபாஷ் தேர்தல் ஆணையம்...!

சபாஷ் தேர்தல் ஆணையம்...!
X

தேர்தல் ஆணையம் கோப்பு படம்

இந்த முறை ஒட்டுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நேர்மையான தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தவறு என்பது தெரிந்து பலரும், இது என்ன தவறு என பலரும் நினைத்து ஓட்டுக்கு பணம் வாங்க வரிசையில் நிற்கின்றனர்.

தமிழகம் சந்தித்த தேர்தல்களில் இந்த தேர்தல் சற்று கூடுதலான நியாயமான நிலையில் நடக்கிறது. இந்த தேர்தலில் பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தரவில்லை. ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என சொன்ன வாக்காளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆங்காங்கே சில இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களும் உள்ளனர். அவர்களும் பெரிய அளவில் தரவில்லை. மிக, மிக குறைந்த பணத்தையே கொடுத்துள்ளனர். அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கொடுத்துள்ளனர்.

ஓட்டுப்போட பணம் வாங்குவது மிகப்பெரிய ஜனநாயக குற்றம். இதற்கு தண்டனையும் வழங்க முடியும். ஓட்டுப்போட பணம் வாங்குபவர்களும் தண்டனை பெற வேண்டும். கொடுப்பவர்களும் தண்டனை பெற வேண்டும். இது தான் இந்திய ஜனநாயக தேர்தல் நடைமுறை. ஆனால் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய அளவில் போட்ட கிடுக்குப்பிடி நடவடிக்கை இந்த முறை மிகப்பெரிய ஏமாற்றத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து விட்டது. கிட்டத்தட்ட நியாயமான தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத அளவி்ல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இதனை பாராட்டாமல், பலரும் திட்டுகின்றனர். வருத்தப்படுகின்றனர். இது தான் வேதனைக்குரிய விஷயம். அதாவது யாராவது ஒரு சில நுாறு ரூபாய்களாவது தருவார்களா? என்று ஏழைகள், நடுத்தர மக்கள் கூட எதிர்பார்த்து காத்திருந்தனர். அது தவறு என தெரிந்தும் பலர் பணம் வருமா? என எதிர்பார்த்து காத்திருந்தனர். சிலர் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு சென்றே பணம் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

இது தவறு என புரியாத ஒரு அறியாமையையும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த ஒரு ஜனநாயக நாட்டில் நுாறு ரூபாய், இருநுாறு ரூபாய்க்கு மக்களை கையேந்த வைக்கும் நிலையில் தான் இதுவரை ஆட்சிகள் நடந்திருக்கின்றன என்ற வேதனைகளையும் தான் அந்த இடத்தில் கணிக்க முடிந்தது என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்தனர். எப்படி இருந்தாலும், இந்த முறை சில இடங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றே பாராட்டி ஆக வேண்டும்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி