இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
அர்விந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)
நீரிழிவு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் உணவை சாப்பிடாமல், சிறையில் இனிப்பு, மாம்பழம் ஆகியவற்றை கெஜ்ரிவால் சாப்பிடுகிறார்'. வேண்டுமென்றே இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கப் பார்க்கிறார்', என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு ஏப்.,18ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூஹைப் ஹூசைன் கூறியதாவது:
கெஜ்ரிவால், உடல்நிலையை பற்றிக் கவலைப்படாமல், இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை எடுத்துக் கொள்கிறார். கெஜ்ரிவாலின் உணவுப்பட்டியலை நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்து உள்ளோம். வழக்கமான நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வது இல்லை.
அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வேண்டுமென்றே இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu