சிம் வாங்க இப்படி ஒரு ரூலா? வசமா சிக்கிய டீலர்கள்!

சிம் வாங்க இப்படி ஒரு ரூலா? வசமா சிக்கிய டீலர்கள்!
X
தொலைத்தொடர்பு மோசடிகளை தடுக்க புதிய விதிமுறைகள்: டீலர்களுக்கு 10 லட்சம் அபராதம்

தொலைத்தொடர்பு மோசடிகளை தடுக்க புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது டெலிகாம் துறை. இதன்படி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து மொபைல் சிம் விற்பனை நிலையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களின் சான்றுகளை சரிபார்க்கப்படாமல் சிம் விற்கும் டீலர்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் உலகில் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இனி சிம் வாங்கும் போது கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

புதிய விதிமுறைகள்:

  • செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து மொபைல் சிம் விற்பனை நிலையங்களும் டெலிகாம் ஆப்பரேட்டர்களிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு, பேன் கார்டு மற்றும் வரி பதிவு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை டீலர்கள் சரிபார்க்க வேண்டும்.
  • போலி சான்றுகளை சப்மிட் செய்து சிம் வாங்கியவர்களின் இணைப்பை ரத்து செய்ய வேண்டும்.
  • இந்த விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.

இந்த புதிய விதிமுறைகள் தொலைத்தொடர்பு மோசடிகளை தடுக்க உதவும் என்று டெலிகாம் துறை நம்புகிறது.

அதற்காகவே இனி சிம் வாங்க கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்துள்ளது இந்திய அரசு.

டிஜிட்டல் உலகில் தினந்தோறும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. பணம் பறிக்கும் சம்பவங்களும் கொள்ளை சம்பவங்களும் பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் அரசு அமல்படுத்தி வருகிறது.

இதுவரை 66,000 போலி வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 67,000 மோசடி சிம் டீலர்கள் ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். 52 லட்சம் மொபைல் இணைப்புகளை இதுவரை ரத்து செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே போலி டீலரின் பேரில் நூற்றுக்கணக்கான சிம்கள் வாங்கியது தொடர்பான வழக்குகள் இருக்கின்றன.

Tags

Next Story
குழந்தைகள் பாதுகாப்பு வினாடி - வினா போட்டி..!