Omam water benefits in tamil-ஓகோ..ஓமம்..! இவ்ளோ நன்மைகளா?

Omam water benefits in tamil-ஓமத்தின் ஆரோக்ய நன்மைகள் (கோப்பு படம்)
Omam water benefits in tamil
எப்போதும் மனிதன் சந்தோசமாக வாழவே ஆசைப்படுவான். அதற்கு உடல் ஆரோக்யம் அவசியமான ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு நல்ல பசி எடுத்து, நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி, சிரமமில்லாமல் கழிவு வெளியேறினால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்யமாக இருக்கிறான் என்பதற்கான அடையாளங்கள் ஆகும்.
Omam water benefits in tamil
இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நோய்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் நோய்கள் தாக்கும். அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது உடலில் நல்ல பசியைத் தூண்டவும், சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணமாகவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கவும், ஜலதோஷம், ஆஸ்துமா போன்றவை நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் குறித்த சில சித்த மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைத் தந்துள்ளோம். பயன்பெறுங்கள்.
அகத்தியர் பாடல்:
சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்
பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்
பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?
சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்-அகத்தியர் குணபாடம்
அதாவது சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவை ஓமம் மூலம் சரி செய்ய முடியும் என்று அகத்தியர் கூறியுள்ளார்.
Omam water benefits in tamil
வயிறு மந்தம்
வயிறு மந்தமாக இருந்தால் ஜீரணம் சரியாக இருக்காது அதோடு பசியும் எடுக்காது. வயிறு மந்தத்தை போக்க சித்திரமூல வேர்ப்பட்டை, சுக்கு, ஓமம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். அந்த பொடியில் கடுக்காய் பொடியை கலக்க வேண்டும். எப்போதெல்லாம் வயிறு மந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த பொடியை சிறிதளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிறில் ஏற்பட்ட மந்தம் நீங்கும்.
பசியின்மை
சிலருக்கு பசி எடுப்பதில் கோளாறு இருக்கும். அப்படி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும். அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.
Omam water benefits in tamil
அஜீரணக்கோளாறு
வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, வயிறில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருபது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் தீரும்.
ஜீரண சக்திக்கு
ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாக பசி எடுக்கும்.
Omam water benefits in tamil
ஜலதோசம்
ஜலதோசம், மூக்கடைப்பு போன்றவற்றை விரட்டவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓம பொடியை ஒரு துணியில் கட்டி அதை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். அதே போல ஓமப்பொடியை உச்சந்தலையில் தேய்த்தால் ஜலதோசம் பறந்தோடும்.
எடை குறைய
தினமும் வெறும் வயிற்றில் ஓம தண்ணீர் குடிப்பது எடை குறைவதை துரிதப்படுத்தவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது.
நீரிழிவு பாதிப்பு
ஓம நீர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை அளவை பராமரிப்பதில் ஓமம் பயனுள்ளதாக இருக்கிறது.
Omam water benefits in tamil
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்
ஓம நீர் தசைப்பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்புகளை நீக்க உதவுகிறது. மாதவிடாயின் போது குடிக்க இது ஒரு சிறந்த மருந்து. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. ஓம நீர் குடிப்பதால் மாதவிடாய் சரியான நேரத்தில் நிகழ்கிறது. மேலும் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது.
Omam water benefits in tamil
சரும பாதுகாப்பு
ஓமம் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இது இரத்த சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி மேம்படுத்துகிறது. இதனால் சருமம் தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இதய ஆரோக்யம் பேணுகிறது
ஓமம் உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இது இதய இயக்கத்துக்கு சிறந்ததாக விளங்குவதுடன், நெஞ்சு வலிக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது.
குழந்தைகள் ஆரோக்யம்
குழந்தைகளுக்கு தினமும்அரை டீஸ்பூன் ஓம தண்ணீர் கொடுப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் வாயுவிலிருந்து நிவாரணம் அளிக்கும். ஓமம் நீர் நுரையீரலில் உள்ள நெரிசலைப் போக்க உதவுவதுடன் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலைப் போக்குகிறது. இது குழந்தைகளின் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் உதவுகிறது.
Omam water benefits in tamil
பொது எச்சரிக்கை :
இங்கு தரப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள் வாசகர்களுக்கான தகவல்களாகத்தான் எழுதப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை மருத்துவரிடம் ஆலோசனை செய்து உட்கொள்வது பாதுகாப்பானதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu