பிக்பாஸ் வீட்டில் இருந்து, இந்த வாரம் வெளியேறுவது ரக்சிதாவா? - ஏமாற்றத்தில் ரசிகர்கள்
his week bigg boss 6 eliminated contestant- பிக்பாஸ் போட்டியாளர் ரக்சிதா.
this week bigg boss 6 eliminated contestant- கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளை கடந்து, தற்போது ஆறாவது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல்ஹாசன், அந்த வாரம் வீட்டுக்குள் நடந்த பிரச்னைகளை அவருக்கே உரிய பாணியில், கையாளுவார். தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பார். கண்டிப்பார். தக்க அறிவுரைகளை, ஆலோசனைகளை போட்டியாளர்களுக்கு வழங்குவார்.
தற்போதைய ஆறாவது சீசன், கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியாக, விஜய் தொலைக்காட்சியில் துவங்கியது. 20 போட்டியாளர்கள் முதல் நாளில் வீட்டிற்குள் நுழைந்தார்கள், பின் அடுத்த வாரத்தில்தான் மைனா நந்தினி தனியாக வீட்டிற்குள் நுழைந்தார். மொத்தம் 21 போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடந்து இப்போது 8 போட்டியாளர்கள் தான் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, அதிக வெற்றிப்புள்ளிகளை பெற்ற அமுதவாணன், நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டார். அவருக்கு கோல்டன் பினாலே டிக்கெட் வழங்கப்பட்டு விட்டது. அதனால், அவர் போட்டியின் கடைசி நாளில்தான் வெளியேறுவார் என்ற நிலையில், மற்றவர்களின் நிலை அடுத்தடுத்த வாரங்களில்தான் தெரிய வரும்.
இந்த சூழலில் தற்போது விக்கிரமன், அசீம், ஏடிகே, கதிர், அமுதவாணன், ரக்சிதா, மைனா நந்தினி, ஷிவின் ஆகிய எட்டு பேர் மட்டுமே, பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இவர்களில், அமுதவாணன் இறுதி போட்டிக்கு சென்றுவிட்டதால், மீதமுள்ள ஏழு பேரில் ஒருவர், வெளியேற்றப்படுகிறார்.
இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார் என மக்களே ஒரு கணக்கு போட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில்தான் வார இறுதி வந்துவிட்டது, அதாவது எலிமினேஷன் என்ற முக்கிய விஷயம் நடக்க இருக்கிறது.
இதுவரை வந்த ஓட்டுகளின் அடிப்படையில், ரச்சிதா மற்றும் ஷிவின் இருவர் தான் ஓட்டுகள் குறைந்து காணப்படுகின்றனர். ஆனால் கிடைத்த தகவல்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பது ரச்சிதா என கூறுகின்றனர்.இந்த எலிமினேஷன் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் உள்ளது.
எனினும், ஷிவின் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அப்படி இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படும் பட்சத்தில், மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்படுவர். இறுதியில், நான்கு பேர் மட்டுமே, பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டியாளர்களாக இருப்பர். அவர்களில், ஒருவர் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஷிவின் டைட்டில் வின்னராக வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. இப்போது, அந்த நிலை மாறி விட்டது. விக்கிரமன், அசீம் அல்லது கதிரவன் இவர்களில் யாரேனும் ஒருவர் வின்னராக அதிக வாய்ப்புள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu